முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

மன

மூன்றாந்திருவாய்மொழி - பா. 4

131

மன்றோ பிராட்டிக்கு? அப்படியே நமக்கும் ஏதேனும் உண்டோ? 1கலவியில் நிறைவு பெறாமை இருக்கிறபடி. ஆரைக்கொண்டு - 2நெஞ்சு போலே நமக்குப் பாங்காய் இருப்பார் உளரோ? ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்னில்,

    ஓதம் கடல் ஒலி போல எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென்திருப்பேரெயில் வீற்றிருந்த - 3அங்குத்தையது இங்கே நடையாடாநின்ற பின்பு, நாமும் அங்கே போய்ப்புகுமத்தனை ஓதம் கிளர்ந்த கடல்போலே இருந்துள்ள வேத ஒலியானது எங்கும் பரம்பாநின்ற தென்திருப்பேரெயில் வீற்றிருந்த. நல்வேதம் - 4‘‘வேதங்களுக்குள்ளே சாதவேதம் நானாகிறேன்’ என்கிற சாமத்தின் ஒலியாய்க் கிடக்குமத்தனை, பார்த்த பார்த்த இடம் எங்கும், 5அவ்விருப்பைக் கண்டு முத்தர் சாமகானம் பண்ணிப் பிரீதிக்குப் போக்கு விடுமாறு போலே. முழங்கு சங்கக் கையன் - 6வேத ஒலியானது ஸ்ரீபாஞ்சஜன்யத்தைக் கிட்டி எதிர் ஒலி எழாநிற்கும். மாயத்து ஆழ்ந்தேன் - அவனுடைய புன்முறுவல் கடைக்கண் நோக்கம் முதலியவைகளிலே மீள ஒண்ணாதபடி அகப்பட்டேன். அன்னையர்காள் என்னை என் முனிந்தே - 7சம்பந்தம் உண்டு என்னாச் சீறுமத்தனையோ? 8சீற்றத்துக்கு எதிர்த்தலையும் வேண்டாவோ? தர்மி

____________________________________________________________________

1. ‘அப்படி இவளுக்கு முன்பு ஒருகாலும் கலவி இல்லையோ?’ என்ன, ‘கலவியில்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. அந்யாபதேசத்திலே பொருள் அருளிச்செய்கிறார், ‘நெஞ்சு போலே’ என்று
  தொடங்கி.

3. ‘ஓங்கு’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அங்குத்தையது’ என்று தொடங்கி.
  என்றது, ‘பரம்பதத்தில் உண்டான சாமகானம் இங்கே நடையாடாநின்ற பின்பு’
  என்றபடி. அங்குத்தையது - பரமபதத்திலே உள்ளது.

4. ‘வேதாநாம் ஸாமவேதோஸ்மி’ என்பது, ஸ்ரீ கீதை, 10 : 22.

5. தென்திருப்பேரெயிலுள்ளார் சாமகானம் செய்வதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,
  ‘அவ்விருப்பை’ என்று தொடங்கி. அவ்விருப்பை-பரம்பதத்தில் இருப்பை.

6. முழங்குவதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘வேத ஒலியானது’ என்று
  தொடங்கி.

7. ‘அன்னையர்காள் முனிந்து என்?’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘சம்பந்தம்’
  என்று தொடங்கி.

8. ‘என்னை’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘சீற்றத்துக்கு’ என்று தொடங்கி.