உண
132 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
உண்டாய் முனிய வேணுமே!
மாயத்து ஆழ்ந்தேன் என்னை என் முனிந்தே - 1சுவாதீனமுள்ளவரை அன்றோ முனிந்தால்
பிரயோஜனமுள்ளது!
(4)
689
முனிந்து சகடம்
உதைத்துமாயப்
பேய்முலை
உண்டு மருதிடைபோய்க்
கனிந்த
விளவுக்குக் கன்றுஎறிந்த
கண்ண
பிரானுக்குஎன் பெண்மைதோற்றேன்
முனிந்துஇனி என்செய்தீர்
அன்னைமீர்காள்!
முன்னி
அவன்வந்து வீற்றிருந்த
கனிந்த
பொழில்திருப் பேரெயிற்கே
காலம் பெறஎன்னைக்
காட்டுமினே.
பொ - ரை : ‘சீறிச் சகடாசுரனை உதைத்து, வஞ்சனை
பொருந்திய பேயின் முலையை உண்டு, மருத மரங்களின் நடுவே சென்று, பழுத்திருந்த விளாமரத்தினை நோக்கிக்
கன்றினை வீசி அடித்த கண்ணபிரானுக்கு என்னுடைய பெண்மையைத் தோற்றேன்; அன்னைமீர்காள்! இப்பொழுது
என்னைக் கோபித்து என்ன காரியத்தைச் செய்யாநின்றீர்கள்? அவன் முற்பட்டு வந்து எழுந்தருளியிருக்கின்ற,
பழங்கள் நிறைந்திருக்கின்ற சோலைகள் சூழ்ந்த திருப்பேரெயில் என்னும் திவ்விய தேசத்தைக்
காலம் நீட்டிக்காமல் என்னை அழைத்துக் கொண்டு சென்று காட்டுங்கோள்’ என்கிறாள்.
வி - கு :
‘முனிந்து உதைத்து உண்டு எறிந்த கண்ணபிரான் என்க. ‘வீற்றிருந்த திருப்பேரெயிற்கே காட்டுமின்’
என்க. பேரெயிற்கு - வேற்றுமை மயக்கம்.
ஈடு : ஐந்தாம்
பாட்டு. 1‘இங்ஙனம் விரைதல் பெண் தன்மைக்குப் போராதுகாண்,’ என்று தாய்மார்
அலைக்க, ‘அதுவும் பண்டே போயிற்று; பிரயோஜனம் இல்லாத நிலையிலே கொடுபோக நில்லாதே. என்னை
முன்னரே கொடுசென்று தென்திருப்பேரெயிலிலே
______________________________________________________________
1. ‘ஆழ்ந்தேன்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார். ‘சுவாதீனமுள்ளவரை’
என்று தொடங்கி.
2. ‘கண்ணபிரானுக்கு
என் பெண்மை தோற்றேன் காலம் பெற என்னைக்
காட்டுமின்கள்’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
‘தோற்றேன் என்றதனை நோக்கிப் ‘பண்டே போயிற்று’ என்கிறார்.
|