முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

136

திருவாய்மொழி - ஏழாம் பத்து

வேண்டாத சோலை. காலம் பெற என்னைக் காட்டுமினே - 1இக்குடிக்கும் எனக்கும் பரிஹாரம் ஒன்றே அன்றோ? 2பின்னையும் என்னை அங்கே கொண்டுபோய் விடுதலைத் தவிரீர்கோள்; நான் உளேனானபோதே அதனைச் செய்யப் பாருங்கோள். பின்பு தண்ணீர் சென்ற பிறகு அணை கட்டப் பாராமல், நான் ஜீவிக்கும் எல்லையிலே காட்டுங்கோள்.

(5)

              690

        காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்
             காதல் கடலின் மிகப்பெரிதால்
        நீல முகில்வண்ணத்து எம்பெருமான்
             நிற்குமுன் னேவந்தென் கைக்கும்எய்தான்
        ஞாலத் தவன்வந்து வீற்றிருந்த
             நான்மறை யாளரும் வேள்விஓவாக்
        கோலச் செந்நெற்கள் கவரிவீசும்
             கூடு புனல்திருப் பேரெயிற்கே.

    பொ-ரை : ‘நீலமுகில் போன்ற நிறத்தையுடைய எம்பெருமான் என் முன்னே வந்து நிற்பான்; ஆனால், கையால் அணைப்பதற்கு அகப்படான்’ ஆதலால், காதலானது கடலைக்காட்டிலும் மிகவும் பெரியதாய் இருக்கிறது; பூலோகத்திலே வந்து அவன் வீற்றிருந்த, நான்கு வேதங்களிலே வல்லவர்களான  பிராஹ்மணர்களும் அவர்களால் செய்யப்படுகின்ற யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற, அழகிய செந்நெற்பயிர்கள் சாமரையைப் போன்று வீசுகின்ற சேர்ந்த தண்ணீர் நிறைந்திருக்கின்ற திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்திற்குக் காலம் நீட்டிக்காமல் என்னைக் கொண்டுபோய் விடுங்கோள்,’ என்கிறாள்.

    வி - கு :
‘வீற்றிருந்த திருப்பேரெயில்’ என்றும், ஓவாத் திருப்பேரையில்’ என்றும், ‘கவரி’ வீசும் கூடு புனல் திருப்பேரெயில்’ என்றும் தனித்தனியே கூட்டுக.

_____________________________________________________________

1. ‘காட்டுதல் நிச்சயமானால் அன்றோ ‘காலம் பெற என்னைக் காட்டுமின்’
  என்ன வேண்டுவது?’ என்ன. அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘இக்குடிக்கும்’ என்று தொடங்கி. எறது, ‘இவள் ஜீவனத்தின் வழியே
  இக்குடிக்கும் ஜீவனம்’ என்றபடி.

2. ‘காலம் பெற’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘பின்னையும்’
  என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘பின்பு’ என்று தொடங்கி.