புனல
மூன்றாந்திருவாய்மொழி - பா.
7 |
139 |
புனல் திருப்பேரெயில் -
1மழை சோறு முதலியவைகள் விஷயமாக அங்குள்ளார்க்கு முயற்சி செய்ய வேண்டாமலே
இருக்கை. 2அவை ஆநுஷங்கிக பலமாய் வருமத்தனை; நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே
தான் வேண்டும்’ என்றும், ‘அங்கங்கே அவை போதரும்’ என்றும் சொல்லக்கடவதன்றோ? காட்சிக்கு
இனிய செந்நெல்களானவை அங்குத்தைக்குக் கவரி வீசினாற்போலே அசையாநிற்கும். ஆற்றுநீர், ஊற்றுநீர்,
மழைநீர் என்னும் இவை மூன்றும் கூடி இருக்கையாலே தண்ணீர் நிறைந்திருத்தலின் ‘கூடுபுனல் திருப்பேரெயில்’
என்கிறது. திருப்பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமின்கள் - 3என் விடாய்
தீரச் சிரமத்தைப் போக்கும்படியான தேசத்திலே கொடுபோய்ப் போகடப் பாருங்கோள். அன்றிக்கே,
‘அங்குள்ள செந்நெல்லுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே, இவளுக்கும் அவ்வூரில் காட்சியே
தாரகமாய் இருக்கிறபடி’ என்னுதல்.
(6)
691
பேரெயில் சூழ்கடல்
தென்னிலங்கை
செற்ற
பிரான்வந்து வீற்றிருந்த
பேரெயிற்
கேபுக்குஎன் நெஞ்சம்நாடிப்
பேர்த்து
வரஎங்கும் காணமாட்டேன்;
ஆரை இனிஇங் குடையம்தோழீ!
என்நெஞ்சம்
கூவவல் லாருமில்லை;
ஆரை இனிக்கொண்டென்
சாதிக்கின்றது?
என்நெஞ்சம்
கண்டதுவே கண்டேனே.
பொ - ரை :
‘பெரிய மதில்கள் சூழ்ந்த கடலுக்கு நடுவேயுள்ள
அழகிய இலங்கா நகரத்தை அழித்த பிரான் வந்து வீற்றிருந்த திருப்
_____________________________________________________________
1. ‘ஓவா’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘மழை’ என்று தொடங்கி.
2. ‘பலத்தின் பொருட்டு
அன்றிக்கே, கைங்கரியமாக அநுஷ்டித்தார்களாகில்
பலம் உண்டாகிறபடி யாங்ஙனம்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்,
‘அவை’ என்று தொடங்கி, ஆநுஷங்கிகம்-தானாகவே வருவது. அதற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘நீள்செல்வம்’ என்றும், ‘அங்கங்கே’ என்று
தொடங்கி. ‘நீள்செல்வம்’ என்பது,
பெருமாள் திருமொழி, 5 : 9. ‘அங்கங்கே’
என்பது, பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 4.
3.
‘கூடுபுனல் திருப்பேரெயில்’ என்று அடை கொடுத்து ஓதியதற்கு இரண்டு
வகையாக பாவம் அருளிச்செய்கிறார்,
‘என் விடாய்’ என்று தொடங்கியும்,
‘அங்குள்ள’ என்று தொடங்கியும்.
|