உன
|
14 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
உன்னடிக்கீழ் அமர்ந்து
புகுந்தேன்’ என்ற பின்பும். எண்ணுகின்றாய். ‘ஈஸ்வரனுக்கு வேறு வேலை இல்லை என்றிருக்கிறார்.
2‘எந்தத் தருமபுத்திரனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜநார்த்தனனுமான கண்ணபிரான்,
மந்திரியாயும் காக்கின்றவனாயும் சிநேகிதனாயும் இருக்கிறான்?’ என்கிறபடியே, பாண்டவர்கள்
காரியத்தை எண்ணினாற்போலே, இங்குக் காரியம் செல்லாநிற்கச்செய்தே, மந்திரமும் செல்லுகிறபடி.
‘இவரை நம் பக்கலினின்றும் பிரித்தோமாம் விரகு என்னோ?’ என்று சிந்திக்கிறான் என்றிருக்கிறார்.
எண் இலாப் பெருமாயனே
- 3‘ஈஸ்வரன் இந்த மூலப் பிரகிருதியினின்றும் இந்த உலகத்தைப் படைக்கிறான்,’
என்றும், ‘என்னுடைய மாயை தாண்ட முடியாதது,’ என்றும் சொல்லுகிறபடியே, எண்ணிறந்த செயல்களைச்
செய்யவற்றாய், நீ வேண்டாதாரைச் சிறை இட்டு நலியக்கடவதான பிரகிருதியைப் பரிகரமாகவுடையவனே!
அன்றிக்கே, ‘எண்ணிறந்த மஹா ஆச்சரியமான குணங்களையுடையவனே!’ என்று பிள்ளான் பணிக்கும்படி.
4‘இப்படிக் குணவானாயிருக்கிற உனக்கு என்னை நலிகைக்கு என்ன சேர்த்தி
________________________________________________________________________
1. ‘என்னுகின்றாய்’ என்னும்
நிகழ்காலத்தின் பொருளை விளக்குகிறார், ‘ஈஸ்வரனுக்கு’
என்று தொடங்கி.
2. ‘குமை தீற்றி’ என்றதனைக்
கடாட்சித்து. ‘இன்னம் எண்ணுகின்றாய்’ என்ற
நிகழ்காலத்துக்குத் திருஷ்டாந்தத்தோடு வேறும்
ஒரு வகையாகக் கருத்து
அருளிச்செய்கிறார், ‘எந்தத் தருமபுத்திரனுக்கு’ என்று தொடங்கி.
‘யஸ்ய மந்த்ரீச
கோப்தாச ஸூஹ்ருச்சைவ ஜநார்த்தந:
ஹரி: த்ரைலோக்ய
நாத: ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்’
என்பது, பாரதம், ராஜசூயம்.
3. ‘மாயன்’ என்றதற்கும்,
‘பிரகிருதி எண்ணிறந்த செயல்களைச் செய்யும்,’ என்பதற்கும்
பிரமாணம், ‘ஈஸ்வரன்’ என்று தொடங்குவது,
‘பெருமாயன்’ என்பதற்குப் பிரமாணம்,
‘என்னுடைய’ என்று தொடங்குவது.
‘அஸ்மாந்மாயீ
ஸ்ருஜதே விஸ்வமேதத்’
என்பது, உபநிடதம்.
‘மம மாயா துரத்யயா’
என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.
4. பிள்ளை திருநறையூர் அரையர் நிர்வாஹத்திலே கருத்து அருளிச்செய்கிறார்
‘இப்படி’ என்று தொடங்கி.
|