New Page 1
146 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
நெருங்கின பூமியும்,
அதனைச் சூழ்ந்த கடல் ஏழு, அவற்றுக்கெல்லாம் இடம் தருகின்ற ஆகாசமும் என்னுமிவை இத்தனைக்கும்
அவ்வருகுப்பட்டிருக்கை. ‘இப்படிக் காதல் கரைபுரண்டால் செய்யப் பார்த்தது என்?’ என்ன, தெண்
திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சென்று சேர்வான் - 1இந்தக்
காதல் மறுநனையும்படியான விஷயம் இருந்த இடத்தே போய்ப்புகுமத்தனை. தெளிந்த திரைகளாலே சூழப்பட்டு
அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயிலே போய்ப்புகுமத்தனை. 2‘பலவித மலர்களினுடைய
சிறந்த வாசனை நிறைந்த அந்தச் சித்திரகூடமலையில் பல உத்தியானங்களில் விளையாடி அதனால்
வியர்வையடைந்து வாட்டமுடையவளாய்த் தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்’ என்கிறபடியே,
அனுபவத்திற்குத் தகுதியான தேசத்திலே போய்ப் புகக்கடவோம். சேர்வன் சென்றே - 3இனிப்பகட்டால்
தீராது, புக்கு அல்லது விடேன். 4ஆள் விடுதல், அவன் வரவு பார்த்திருத்தல் செய்யேன்.
சென்று சேர்வன் - இனி எதிரே அவன் வரிலும் மீளேன். அவனைச் சேர்தல் அன்று உத்தேசியம், அங்கே
சென்று கிட்டகை.
(8)
693
சேர்வன்சென்று
என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்
காள்!என்னைத் தேற்றவேண்டா;
நீர்கள் உரைக்கின்றது
என்னிதற்கு?
நெஞ்சும்
நிறைவும் எனக்குஇங்குஇல்லை;
கார்வண்ணன்
கார்க்கடல் ஞாலம்உண்ட
கண்ண
பிரான்வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண்கழ
னிப்பழனத்
தென் திருப்பேரெயில்
மாநகரே.
________________________________________________________________
1. ‘அவன் வீற்றிருந்த தென்
திருப்பேரெயில்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘இந்தக் காதல்’ என்று தொடங்கி.
2. ‘தெண்திரை சூழ்ந்தவன்’
என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘பலவித
மலர்’ என்று தொடங்கி.
‘தஸ்ய உபவந ஷண்டேஷூ
நாநாபுஷ்ப ஸூகந்திஷூ
விஹ்ருத்ய ஸலிலக்லிந்நா
தவாங்கே ஸமுபாவிஸம்’
என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 14.
3. ‘சென்றே’ என்ற ஏகாரத்தின்
பொருள் அருளிச்செய்கிறார், ‘இனிப் பகட்டால்’
என்று தொடங்கி.
4. ‘சென்று
சேர்வன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘ஆள் விடுதல்’
என்று தொடங்கி.
|