694
மூன்றாந்திருவாய்மொழி - பா.
10 |
149 |
694
நகரமும் நாடும்
பிறவும்தேர்வேன்
நாண்எனக்கு
இல்லைஎன் தோழிமீர்காள்!
சிகர மணிநெடு
மாடநீடு
தென்திருப்
பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக்
காதன்மாயன்
நூற்று
வரையன்று மங்கநூற்ற
நிகரில் முகில்வண்ணன்
நேமியான்என்
நெஞ்சங்
கவர்ந்துஎனை ஊழியானே.
பொ - ரை :
என்னுடைய தோழிமீர்காள்! நகரங்களிலும் நாடுகளிலும் பிற இடங்களிலும் தேடுவேன்; எனக்கு நாணம்
இல்லை; ‘என்னை?’ எனின், சிகரங்களையுடைய அழகிய நீண்ட மரடங்கள் நிலைத்திருக்கின்ற தென்திருப்பேரெயிலில்
எழுந்தருளியிருக்கின்ற மகர நெடுங்குழைக்காதனும் மாயனும் துரியோதனாதியர்கள் அன்று அவியும்படியாபக
மந்திரித்த ஒப்பில்லாத முகில் வண்ணனும் நேமியானுமான எம்பெருமான் என் மனத்தினைக்
கொள்ளைக்கொண்டு எத்தனை ஊழிக் காலத்தையுடையான்?
வி - கு :
‘மகர நெடுங்குழைக்காதன்’ என்பது, அந்தத் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன்
திருப்பெயர். ‘எனை ஊழியான்’ என்பது, ‘அவன் என் மனத்தினைக் கவர்ந்து எத்தனை ஊழிக்காலமாயிற்று?’
என்றபடி.
ஈடு : பத்தாம்
பாட்டு. 1‘இருந்ததே குடியாக உலகத்தார் உன்னைப் பழி சொல்லார்களோ?’ என்று தோழிமார்கள்
சொல்ல ‘அவர்கள் அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறாள்.
நகரமும் நாடும்
பிறவும் தேர்வன்-‘உன் துணிவாக, நாட்டார் நகரத்தார் மற்றுமுள்ளாரும் எல்லாரும் அறிந்து பழி
சொல்லுகிறார்களே!’ என்ன, ‘எனக்குதான் தேட்டம் அவனேயோ? நகரம், நாடு பத்தநம் முதலானவைகள்,
இவற்றிலுள்ளாருடைய
_______________________________________________________________
1.
‘நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
இருந்ததே குடியாக-குடி இருக்கிற பேரெல்லாரும்.
|