உண
முதல் திருவாய்மொழி - பா. 1 |
15 |
உண்டு?’ 1விடுநகங்கட்டி
நலியாநிற்கச்செய்தே ‘தண்ணீர்’ என்பாரைப்போலே, அவன் குணங்களைச் சொல்லுகிறபடி. இமையோர்கள்
ஏத்தும் - 2‘தன்னால் அல்லது செல்லாதாரை ஒருவன் போகட வல்லபடியே என்று’ கொண்டாட
ஒரு விபூதி உண்டாவதே! 3அவர்கள் முகங்கொடுக்கையாலன்றோ அவன் இங்கு வாராதிருக்கிறது?’
என்றிருக்கிறார். 4திரிசங்குவினுடைய ஓலக்கம் கிளர்ந்தாற்போலே கிளர்ந்ததாகில்,
அவனுக்கு என்னை விட்டிருக்கப்போமோ?
உலகம் மூன்றுடை அண்ணலே
- 5‘தான் நினைத்த போது காரியம் செய்கிறான்,’ என்று இவர் இருப்பதற்காகத் தன்னுடைய
சேஷித்துவத்தைக் காட்டினான் அவன்; ‘இப்படி இரட்சிக்கறவன் நம்மை நலியுமோ?’ என்றிருக்கும்படி
செய்து பின்னை நலிகைக்குக் காட்டினான் என்றிருக்கிறார் இவர். அமுதே - அவன் தன்னுடைய இனிமையைக்
காட்டிற்றும் தம்மை அனுபவிப்பிக்கைக்கு அன்று; புறம்பு ஒன்று பொருந்தாதே நோவுபட என்றிருக்கிறார்.
அப்பனே - ‘இப்படி உபகாரகனானவன் நலியாநின்றானோ?’ என்று நம்பும்படி செய்து பின்பு அபகரித்தற்காகக்
காட்டினான் என்றிருக்கிறார். என்னை ஆள்வானே - 6பிராங்நியாயம் பலிக்கும் என்றிருக்கைக்காகக்
________________________________________________________________________
1. ‘மற்றை நிர்வாஹத்திலே
கருத்து அருளிச்செய்தார் திருவுள்ளம் பற்றி, நலிகிறவனைக்
குணவான் என்கிறது என்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘விடுநகம்’
என்று தொடங்கி.
2. ‘இமையோர்கள் ஏத்தும’்
என்றதற்கும், ‘நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்’
என்றதற்கும் தகுதியாக, பாவம் அருளிச்செய்கிறார்,
‘தன்னால் அல்லது’ என்று
தொடங்கி.
3. ‘நித்தியசூரிகளை வெறுப்பான்
என்?’ என்ன. ‘அவர்கள்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
4. ‘அவர்கள் முகங்கொடாவிடில்
அவன் இங்கு வருவானோ?’ என்ன.
‘திரிசங்குவினுடைய’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
5. ஈஸ்வரன், இவர் தரிக்கைக்காகக்
காட்டின சேஷித்துவத்தை, ‘நலிவான் இன்னம்
எண்ணுகின்றாய்’ என்றதற்குத் தகுதியாக
யோஜிக்கிறார் என்கிறார், ‘தான்
நினைத்தபோது’ என்று தொடங்கி. இந்த யோஜனை மேலே
வருகின்ற ‘அமுதே’
என்பது போன்றனவற்றிற்கும் ஒக்கும்.
6. பிராங் நியாயமாவது, முன் நியாயம், என்றது, மேலே, மயர்வற மதி நலம் அருளித்
தன்னால் அல்லது செல்லாமையை
உண்டாக்கினமை. ‘பலிக்கும்’ என்றது, ‘இனி
மேலும், அநிஷ்டநிவ்ருத்தி பூர்வமாக இஷ்டப்
பிராப்தியும் செய்து கொடுக்கும்’
என்றபடி.
|