பழ
|
150 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
பழியேயன்றோ எனக்குத்
தேட்டம்? ‘தேர்வன்’ ‘தேடுகிறேன்’ என்றபடி. 1நீங்கள் சேர்க்கிலீர்கோளாகில்,
அவன் தானாக வாரானாகில், அவனுடனே கூட்டிப் பழி சொல்லுகிற இவர்கள் அன்றோ என் ஆத்மாவை நோக்குகிறார்கள்?
2‘அலர் எழ ஆருயிர் நிற்கும்’ என்றான் அன்றோ? பிறவும் - மற்றுமுள்ளனவும். நாண்
எனக்கு இல்லை - 3நாணம் இங்கு இல்லாமையே அன்று; அங்குப் போனாலும் இல்லை. இந்தச்
சரீரத்தில் முதலிலே இல்லாமை. என் தோழிமீர்காள் - 4இது நான் உங்களுக்குச்
சொல்லி அறிய வேண்டுபடி ஆவதே! சிகரம் மணி நெடு மாடம் நீடு தென்திருப்பேரெயில் வீற்றிருந்த
- மலைகளின் சிகரங்களைக் கொடுவந்து வைத்தாற்போலே ஓக்கமுடைத்தாய், இரத்தின மயமான மாடங்களையுடைய
பெரிதான தென்திருப்பேரெயில் வீற்றிருந்த. மகர நெடுங்குழைக்காதன் - மகரத்தின் வடிவமான பெரிய
ஆபரணத்தையுடைய கர்ணபாசங்களையுடையவன். 5அவனுடைய ஒரோ அவயங்களில் படிந்
____________________________________________________________________
1. ‘தேட்டமாகைக்குக் காரணம்
என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘நீங்கள்’ என்று தொடங்கி.
2. ‘பழிச்சொல் ஆத்துமாவைப்
பாதுகாக்கும்,’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘அலர் எழ’ என்று தொடங்கி.
‘அலரெழ ஆருயிர் நிற்கும்;
அதனைப்
பலர் அறியார் பாக்கியாத்
தால்.’
என்பது திருக்குறள்.
3. ‘இங்கு இல்லை’ என்னாமல்,
‘எனக்கு இல்லை’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘நாணம்’ என்று தொடங்கி. அதனை விவரணம்
செய்கிறார்,
‘இந்தச் சரீரத்தில்’ என்று தொடங்கி.
4. ‘தோழிமீர்காள்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘இது நான்’ என்று தொடங்கி.
5. ‘மகரநெடுங்குழைக்காதன்’
என்றதனோடே ‘என் நெஞ்சங்கவர்ந்து’ என்றதனைக்
கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார், ‘அவனுடைய’
என்று தொடங்கி.
இங்கே,
‘தோள்கண்டார் தோளே
கண்டார்; தொடுகழற் கமல மன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்;
தடக்கைகண் டாரும் அஃதே;
வாள்கொண்ட கண்ணார்
யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ்கொண்ட சமயத் தன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்.’
என்ற கம்பராமாயணச் செய்யுளை
ஒப்பு நோக்குக.
|