முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஊழ

152

திருவாய்மொழி - ஏழாம் பத்து

ஊழியானே - பல கல்பங்கள் உண்டு. 1துரியோதனன் முதலாயினோரை வெல்ல எண்ணினார்போலே, என் நெஞ்சினைக் கவர்வதற்கு எத்தனை காலம் எண்ணினானோ!

(10)

                   695

        ஊழிதோறு ஊழி உருவும்பேரும்
             செய்கையும் வேறவன் வையம்காக்கும்
        ஆழிநீர் வண்ணனை அச்சுதனை
             அணிகுரு கூர்ச்சட கோபன்சொன்ன
        கேழில்அந் தாதிஓர் ஆயிரத்துள்
             இவைதிருப் பேரெயில் மேய பத்தும்
        ஆழிஅம் கையனை ஏத்த வல்லார்
             அவர்அடி மைத்திறத்து ஆழியாரே.

   
பொ-ரை : கல்பந்தோறும் வடிவும் பேரும் செயலும் வேறுபடக் கொள்ளுமவனும், பூலோகத்தைப் பாதுகாக்கின்ற கடல் வண்ணனும் அச்சுதனுமான எம்பெருமானை, அழகிய திருகுருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத அந்தாதி ஓராயிரத்துள், திருப்பேரெயில் என்னும் திவ்விய தேசத்தைச் சேர்ந்த இவை பத்தும் கொண்டு, திருவாழியை அழகிய கையிலேயுடைய மகரநெடுங்குழைக்காதனைத் துதிக்க வல்லாராகிய அவர்கள் அடிமை விஷயத்திலே திருவாழியின் தன்மையையுடையவர்களாவார்கள்.

    வி-கு :
அச்சுதன் - அழிவில்லாதவன்; ‘அடியார்களை நழுவ விடாதவன்’ என்னலுமாம். திருப்பேரெயில் மேய இவை பத்தும் என்று கூட்டுக. ஆழியார்-மூழ்கினவர்கள் என்னலுமாம்.

    ஈடு :
முடிவில், 2‘இத்திருவாய்மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே மிகவும் மூழ்கினாரேயாவர்,’ என்கிறார்.

    ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன்-அடியார்களைக் காப்பாற்றும்பொருட்டுக் கல்பந்தோறும் கல்பந்தோறும் திருமேனியும் திருப்பெயரும் செயல்களும் வேறுபடக்

______________________________________________________________

1. ‘நூற்றுவரை’ என்றதனோடு ‘என் நெஞ்சம் கவர்ந்து’ என்றதனைக் கூட்டி,
  பாவம் அருளிச்செய்கிறார், ‘துரியோதனன்’ என்று தொடங்கி.

2. ‘ஏத்த வல்லார் அடிமைத்திறத்து ஆழியார்’ என்றதனைக் கடாட்சித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.