New Page 1
156 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
போலே கண்கூடாகக் காணலாம்படி
செய்து கொடுத்தான். 1அடியிலே இவர்தாம் எல்லாவற்றையும் கண்கூடாகக் காணவல்லராம்படி
செய்து கொடுத்தான் அன்றோ? 2மயர்வற மதிநலம் அருளின பின்பும் இவ்வளவும் வர வாசனை
பண்ணுவித்தானே! ஆகையாலே, இவர்க்கு ஒரு குறையும் இல்லையே!
3அன்றிக்கே,
மேலே, ‘பேரெயில் சூழ்கடல் தென் இலங்கை செற்றபிரான்’ என்று இராமாவதாரத்திற்செய்த வெற்றிச்செயல்
சொல்லப்பட்டமையாலே, அவ்வழியாலும் எல்லா அவதாரங்களிலும் உண்டான வெற்றிச் செயல்களை நினைந்து,
இராமாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் சக்கரவர்த்தியைப்
போலவும், கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் ஸ்ரீவசுதேவரைப்
போலவும் இவரும் உகந்து பேசுகிறார் என்னுதல். 4‘அஹம் புந;- என் தன்மையை அறிந்து
என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப்போக’ என்றால் நான் உயிர் வாழ்வேன் என்று
சொன்னாயே! தேவ குமார ரூபம் - 5அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’
என்கிறது? ‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க, ‘கண்
____________________________________________________________________
1. ‘அப்படிக் கொடுத்தானோ?’
என்னில், ‘அடியிலே’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
2. ‘ஆனாலும், எல்லா அவதாரங்களிலும்
செய்த வெற்றிச் செயல்களை ஒருகாலே
அனுபவிக்கச் சத்தி உண்டோ?’ என்ன, ‘மயர்வற’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார். வாசனை பண்ணுவிக்கையாவது, அந்த ஞானத்தை இவ்வளவாகத்
தெளிவு
ஆக்குதல்.
3. மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்கும் வேறும் ஒரு வகையிலே
இயைபு அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
4. ஸ்ரீ ராமாவதாரத்தில் செய்த
வெற்றிச் செயலைக் கண்டு சக்கரவர்த்தி உகந்ததற்குப்
பிரமாணமும், அந்தப் பிரமாணச் சுலோகத்திற்குப்
பொருளும் அருளிச்செய்கிறாரு,
‘அஹம் புந;’ என்று தொடங்கி.
‘அஹம்புந: தேவகுமார ரூபம்
அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந
பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’
என்பது, ஸ்ரீராமா. அயோத். 12 :
105. இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி
புலம்பிக் கூறுவது.
5. ‘அது கிடக்க’
என்றது, ‘எனக்கு ஹிதத்தைச் செய்து போந்தவளாயிருக்கிற தன்மை
கிடக்க’ என்றபடி. தேவகுமாரன்
- சுப்பிரமணியன். இவர்க்கும் - பெருமாளுக்கும்.
‘அவ்வளவேயோ’ என்றது. ‘சுப்பிரமணியன்
அளவேயோ அழகு?’ என்றபடி.
கேட்க - நம்பிள்ளையைக் கேட்க.
|