New Page 1
|
நான்காந்திருவாய்மொழி - முன்னுரை |
157 |
ணெச்சில் ஆம்’ என்று
தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடிகரிபூசுகிறான் என்றார். அலங்க்ருதம் - 1அதனாலும்
வெறும் புறங்காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை. தம்
ஸூதம் - 2இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி. ஆ வ்ரஜந்தம் -
3மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே. 4அதுவும்
வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ? நந்தாமி
பஸ்யந்நபி - 5கண்டபடியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலேயாயிற்று, நாடோறும்
நாடோறும் கணந்தோறும் கணந்தோறும் உகக்கும்படி. 6தர்ஸநேந - அணைத்தல், வார்த்தை
சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும். 7கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்திற்போலே
_______________________________________________________________________
1. ‘தேவ குமார’ என்றதன்
பின், ‘அலங்க்ருதம்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘அதனாலும்’ என்று தொடங்கி. அதனாலும்-கரி
பூசுகிற தன்மையாலும். கரிபூசுதல்
கண்ணெச்சில் வாராமைக்காகக் கரிபூசுதல்.
2. ‘இவனுக்கு’ என்றது, சக்கரவர்த்தியை,
அன்றிக்கே, வால்மீகி முனிவரையுமாம்.
இரண்டு படி-அழகும் புத்திரனாகும் தன்மையும்.
3. ‘ஆஸமந்தாத் விரஜந்தம்’
என்று திருவுள்ளம் பற்றி, பாவம் அருளிச்செய்கிறார்,
‘மலர் மலரும்போது’ என்று தொடங்கி.
ஆஸமந்தாத்-சுற்றிலும், விரஜந்தம்
-வந்துகொண்டிருக்கிற, ‘மலர் மலரும்போது’ என்று தொடங்கும்
வாக்கியத்துக்குக்
கருத்து, ‘மலர் மலரும்போது’ ஓடை எங்கும் ஓர் அழகு பிறக்குமாறு போலே,
இவர்
நடக்கும்போது திருமேனி எங்கும் ஒரு சேர ஒரு செவ்வி பிறக்கும்’
என்பது. எங்கும் ஒக்க-ஓடை முதலான
இடங்கள் எங்கும் ஒக்க.
4. ‘ஆபிமுக்யேந விரஜந்தம்’
என்று திருவுள்ளம்பற்றி, அதற்கே வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார், ‘அதுவும்’ என்று தொடங்கி.
ஆபிமுக்யோ-நேர் முகமாக.
5. ‘பஸ்யந்நபி, நந்தாமி’
என்கிற நிகழ்காலச்சொல் இரண்டற்கும் பாவம்
அருளிச்செய்கிறார், ‘கண்டபடியே’ என்று தொடங்கி.
பஸ்யந்நபி.-நாள்தோறும்
பார்க்கிறேன். நந்தாமி-கணந்தோறும் மகிழ்கிறேன்.
6. ‘இப்படிக் கணந்தோறும் உகக்கிறது
பேசுதல், கலவி இவைகளாலேயோ?’ என்ன,
‘தர்ஸநேந’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
7. ‘காட்சி மாத்திரம்
போதியதாமோ?’ என்ன, ‘கரை புரண்ட’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். கரை
புரண்ட அனுபவமுள்ள இடம்-பரமபதம்.
|