முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

158

திருவாய்மொழி - ஏழாம் பத்து

காணும் பிரயோஜனம், 1‘ஸதாபஸ்யந்தி’ அன்றோ? பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி, பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’ 2‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே 3தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலேகாணும். 4‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து, தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?

    3
அன்றிக்கே, ‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு எதிர்த்தலையான அத்தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று பிள்ளை திருநறையூர் அறையர் பணிக்கும்படி.

________________________________________________________________________

1. ‘அங்கும் காட்சியோ பிரயோஜனம்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஸதாபஸ்யந்தி’ என்று. ஸதாபஸ்யந்தி-எப்பொழுதும் எல்லா
  நிலைகளிலும் பார்த்துக்கொண்டே இருத்தல். இது, வேதவாக்கியம்.

2. ‘வயது முதிர்ந்த கிழவராகிய சக்கரவர்த்தி மகனைப் போன்ற ஆகக்கூடுமோ?’
  என்ன, ‘காமனைப் பயந்த’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. ‘சக்கரவர்த்தி அங்ஙனமாதல் கூடுமோ?’ எனின், ‘தன்னை அனுபவிப்பாரையும்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. கிருஷ்ணாவதாரத்தில் செய்த வெற்றிச் செயல்களைக் கண்டு ஸ்ரீவசுதேவர்
  உகந்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘ஸ்ரீவசுதேவர்’ என்று தொடங்கி.

    ‘மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
    யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’

என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.

5. இரண்டு திருவாய்மொழிகட்கும் வேறு ஒரு வகையாகவும் இயைபு
  அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.