696
நான்காந்திருவாய்மொழி - பா. 1 |
159 |
696
ஆழி எழச்சங்கும்
வில்லும் எழத்திசை
வாழி எழத்தண்டும்
வாளும் எழஅண்டம்
மோழை எழமுடி பாதம்
எழஅப்பன்
ஊழி எழஉல கங்கொண்ட
வாறே.
பொ - ரை :
திருஉலகு அளந்தருள வளருகிற போது. திருவாழியாழ்வான் முன்னே தோன்றவும், பின் ஸ்ரீபாஞ்சஜன்யம்
ஸ்ரீகோதண்டம் ஆகிய இவைகள் தோன்றவும், எல்லாத் திசைகளினின்றும் மங்களாசாசனம் செய்கின்ற
ஒலி தோன்றவும், கதை என்ன, வாள் என்ன, ஆகிய இவைகள் தோன்றவும், அண்ட முகடு பிளந்து நீர்க்குமிழி
தோன்றவும், திருமுடியும் திருவடியும் ஒருசேர எழும்படியாகவும், நல்லகாலம் தோன்றும்படி ஆயின; அதலால்,
என்னப்பன் உலகத்தை அளந்துகொண்ட விதம் என்னே!
வி - கு :
‘தண்டும் வாளும் எழத் திசையும் வாழி எழ’ என மாற்றுக, ஏகாரம், ஆச்சரியப்பொருளில்
வந்தது.
இத்திருவாய்மொழி,
கலி விருத்தம்.
ஈடு : முதற்பாட்டு.
1அவை எல்லாவற்றுக்கும் அடியாக, திருவுலகு அளந்தருளின பெரிய வெற்றிச்செயலை
அருளிச்செய்கிறார்.
2‘தேவர்கள்
தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுகிறார்கள்; அசுரர்கள் கொல்லப்பட்டார்கள்; அச்சம்
என்பது சிறிதும் இல்லை; பகவானால் இவ்வுலகமானது வெல்லப்பட்டது,’ என்கிறபடியே, தனக்கு ஆக்கிக்கொண்ட
செயல் அன்றோ?
_______________________________________________________________
1. ‘உலகம் கொண்டவாறே’
என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘அவை எல்லாவற்றுக்கும்’ என்றது,
‘பத்துத்திருப்பாசுரங்களிலும் சொல்லப்படுகின்ற வெற்றிச் செயல்கள்
எல்லாவற்றுக்கும்’ என்றபடி.
2. ‘இது. பெரிய வெற்றிச்
செயலோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘தேவர்கள்’ என்று தொடங்கி.
‘தேவா: ஸ்வஸ்தாநம் ஆயாந்தி
நிஹதா தைத்யதாநவா:
நபயம் வித்யதே கிஞ்சித்
ஜிதம் பகவதா ஜகத்’
இது, திருவுலகு அளந்தருளின
போது ஜாம்பவான் மஹாராஜர்
பறையறைந்தபடியாம்.
|