க
16 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
காட்டினான் என்றிருக்கிறார்.
1‘இதற்கு முன்பெல்லாம் நம்மை நிர்வஹித்துக்கொண்டு போந்தது நாமும் சில செய்தோ?
அப்படியே மேலும் நம் காரியம் அவன் செய்யும்,’ என்றிருக்கைக்காகச் செய்தானத்தனை; நினைவு வேறே
என்றிருக்கிறார். 2‘என்னை ஆள்வானே! நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்’ என்கிறார்.
(1)
664
என்னை ஆளும் வன்கோ
ஓரைந்
திவைபெய்து
இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான்அணு
காவகை
செய்து
போதி கண்டாய்
கன்னலே! அமுதே!
கார்முகில் வண்ணனே!
கடல்ஞாலம்
காக்கின்ற
மின்னு நேமியினாய்!
வினையேனுடை
வேதியனே!
பொ-ரை :
கரும்புக்கட்டியே! அமுதே! கரியமுகில் வண்ணனே! கடலாற்சூழப்பட்ட உலகத்தை எல்லாம் காக்கின்ற
மின்னுகின்ற சக்கரத்தையுடையவனே! வினையேனுடைய வேதியனே! என்னை அடிமை கொண்டு ஆளுகின்ற வலிய
சுவதந்தர புத்தியோடு கூடின ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களாகிற இவற்றை என் சரீரத்திலே வைத்து
இரவும் பகலும் இவற்றால் தாக்குவித்து உன்னை நான் வந்து கிட்டாதபடி செய்து முகம் தோற்றாதபடியே
போகாநின்றாய்.
வி-கு :
‘என்னை ஆளும் ஐந்து இவை,’ என்க. ‘பெய்து மோதுவித்திட்டுப் போதி’ என்க. ‘வேதியனே! அணுகா
வகை செய்து போக,’ என்க. கண்டாய் - முன்னிலையசை. கன்னல் - கரும்பு. ‘காக்கின்ற நேமி’ என்க.
அன்றிக்கே, ‘காக்கின்ற’ என்பதனை நேமியினானுக்கு அடையாக்கலுமாம். வேதியன் - வேதங்களால்
பேசப்படுகிறவன்.
ஈடு : இரண்டாம்
பாட்டு. 3வலி இல்லாதவனான என்னை இந்திரியங்காளாலே காலமெல்லாம் நலிவித்து,
இந்த நோவை அறிவிக்க ஒண்ணாதபடி ‘போதி’ என்கிறார்.
________________________________________________
1. மேல் வாக்கியத்தை விவரணம்
செய்கிறார், ‘இதற்கு முன்பெல்லாம்’ என்று
தொடங்கி.
2. பிள்ளை திருநறையூர்
அரையர் நிர்வாஹத்துக்கு, அந்வயம் காட்டுகிறார்
‘என்னை ஆள்வானே’ என்று தொடங்கி. மற்றை நிர்வாஹத்திற்கு,
ஆற்றுநீர்ப் பொருள்கோள்.
3. முன் இரண்டு அடிகளைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|