ஆழ
|
நான்காந்திருவாய்மொழி - பா. 1 |
161 |
ஆழி எழ - 5தோற்றத்திலே
அரசு போராயிற்று; 1ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம்
அன்றோ திருவாழி? 2பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே;
3‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திருமுன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’
என்று பொறாமையாலே மேல் விழுந்தார் அன்றோ?
4‘அத
ஹரிவர நாத:- 5தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ?
ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் - 6இவர்களோடு கூடிநின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது,
தூசித் தலையில் ஓர் ஏற்றம்செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார். பூசல் தலையிலே பெருமாளுக்கு
உண்டான கீர்த்தியையும் தம்
_____________________________________________________________________
1. ‘ஆயின், இவன் அரசனோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘ஹேதி
ராஜன் அன்றோ?’ என்று, அதனை விவரணம் செய்கிறார்,
‘திவ்விய’ என்று
தொடங்கி. ‘ஹேதி’ என்பது, ஆயதங்களுக்குப் பொதுப்பெயர்.
2. தோற்றத்திலே அரசு
போர் என்பதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘பரிகரம்’
என்று தொடங்கி. மஹாராஜர்-சுக்கிரீவன்.
சுக்கிரீவனை மஹாராஜர் என்பது
வைணவப் பெருமக்களை மரபு.
3. மஹாராஜர் மேல் விழுகைக்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார் ‘பையல்’
என்று தொடங்கி.
4. அப்படி மேல் விழுந்ததற்குப்
பிரமாணமும், பிரமாணத்திற்குப் பொருளும்
அருளிச்செய்கிறார், ‘அத ஹரிவர நாத:; என்று தொடங்கி.
‘அத ஹரிவரநாத:
ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸிசரபதிம் ஆஜௌ
யோஜயித்வா ஸ்ரமேண,
ககநமதிவிஸாலம் லங்கயித்வா
அர்க்கஸூநு:
ஹரிவரகணமத்யே ராமபார்ஸ்வம்
ஜகாம.’
என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29.
இதனைக் கம்பராமாயணம், இராவணன் தானை காண்
படலத்து, 37 முதல் 41 முடியவுள்ள செய்யுள்களிலும்
அதற்கு அடுத்த
மகுடபங்கப்படலத்தும் காண்க.
5. சுலோகத்திலுள்ள ‘ஹரிவரநாத;’
என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘தம்மோடு’
என்று தொடங்கி.
6.
‘ஆனால், தாம் முற்பட விழுவான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இவர்களோடு’ என்று தொடங்கி. ‘அபியாதாப்ரஹர் தாச-எதிர்த்துப் போர்செய்கிறவர்,
அடிக்கிறவர்’ (இது,
அயோத். 1 : 29.) என்ற சுலோகத்தைக் கடாட்சித்து, பாவம்
அருளிச்செய்கிறார் ‘பூசல் தலையிலே’
என்று தொடங்கி.
|