த
|
162 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
தலையிலே ஏறிட்டுக்கொண்டார்.
நிசிசர பதிம் - 1அத்தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ?
2‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி.
ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து
இளைப்பித்தபடி. யோஜயித்வாஸ்ர மேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார். ககந மதிவிசாலம்
லங்கயித்வா - பரப்பையுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார். அர்க்கஸூநு:-
மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார். 3பிறப்புக்கு ஈடாகச்செய்தார்.
4தன்நிலம் அன்றோ? 6சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப்போம்
போது தெரியாது அன்றோ? ஹரிவர கணமத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள்
நடுவே நின்றார். ராம பார்ஸ்வம் ஜகாம - 6‘தூசித்தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ
முன்னிற்கப்பெறுவர்?’ என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.
ஆழி எழ - 7‘ஆயிரக்காதம்
பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக்காதம் சிறகு அடிக்கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.
சிறகடிக்கொள்ளுகையாவது, பின்பு தூரப்பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல். 8அச்சங்கொள்ளுதற்கு
இடம் அல்லாத இடத்திலும் பயப்படக்கூடியவர்கள், அஞ்சத்தக்க
_____________________________________________________________________
1. ‘நிசிசரபதிம்’ என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘அத்தலையிலும்’ என்று
தொடங்கி. ‘அத்தலையிலும்’ என்ற உம்மை,
தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல
பேர்’ என்று மேலே கூறியதனைத் தழுவுகிறது. அத்தலையிலும்-இராவணனிடத்தும்.
2. ‘ஆனால், அவர்களோடு
போர் செய்தால் என்?’ எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அவன்கீழ்’ என்று தொடங்கி.
3. ‘அப்பட மீளுகைக்குக்
காரணம் யாது?’ என்ன, ‘சூரியனுடைய புத்திரன்
ஆகையாலே’ என்கிறார், ‘பிறப்புக்கு’ என்று தொடங்கி.
4. அப்படிச் செய்கைக்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார், ‘தன் நிலமன்றோ?’ என்று.
5. ‘தன் வரவு தெரியாதபடி
மீளும் தன்மை சூரியனுக்கு உண்டோ?’ என்ன, ‘சூரியன்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘மத்யே’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘இவர்களில்’ என்று தொடங்கி.
6. ‘பார்ஸ்வம் ஜகாம’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘தூசித்தலையிலே’
என்று தொடங்கி.
7. ‘அவனுக்கு முன்பே பரிகரம்
முற்பட்டபடி’ என்றதனை ரசோக்தியாக
அருளிச்செய்கிறார், ‘ஆயிரக்காதம்’ என்று தொடங்கி.
8. முற்படுவதற்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார், அச்சங்கொள்ளுதற்கு’ என்று
தொடங்கி.
|