முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஆழ

164

திருவாய்மொழி - ஏழாம் பத்து

ஆழி எழ - 1இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு, ‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழியாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

    சங்கும் வில்லும் எழ-தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற 2இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே, மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள். அன்றிக்கே, 3‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக்கூடியவர்கள் இரையுள்ள இடத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடார்கள் அன்றோ?’ என்னுதல்; இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே, மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல். 4‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்சஜன்யமானது நின்று ஆர்ப்ப. எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-அவனைப்போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்துகொண்டு நமுசி முதலானவர்களை வாய்வாய் என்றது திருவாழி. விடம் காலும் தீவாய் அரவுகிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை உமிழுமத்தனை அன்றொ திருவனந்தாழ்வானாலாவது? அரவணைமேல் தோன்றல் -திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய பிரதானன். திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்தபோது-ஒரு பூவினைக்கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.

___________________________________________________________________

1. மேலே ‘மூன்று உலகங்களையும்’ என்று தொடங்கி அருளிச்செய்ததனை விவரணன்
  செய்கிறார், ‘இவன்’ என்று தொடங்கி.

2. இளவணி-காலாள்.

3. மற்றை ஆயுதங்கள், திருவாழியாழ்வானிடத்திலேயுள்ள பரிவினாலே புறப்பட்டன
  என்று பொருள் அருளிச்செய்தார்மேல்; இங்கு, சர்வேஸ்வரனிடத்துள்ள பரிவினாலே
  புறப்பட்டன என்று பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றி, அதனை இரண்டு
  வகையாக அருளிச்செய்கிறார், ‘இரை பெறாத’ என்று தொடங்கியும், ‘இனத்திலே’
  என்று தொடங்கியும். கேவலம் பரிவினாலே புறப்பட்டன’ என்பது முதற் கருத்து.
  ‘பொறாமையால் வந்த பரிவினாலே புறப்பட்டன’ என்பது இரண்டாவதற்குக் கருத்து.

4. ‘திருவுலகு அளந்த போது திவ்விய ஆயுதங்கள் பரிவாலே புறப்பட்டன’
  என்பதற்குப் பிரமாணமும் பிரமாணத்திற்குப் பொருளும் அருளிச்செய்கிறார்,
  ‘இடங்கை’ என்று தொடங்கி. இது, இரண்டாந். 71.