வ
|
166 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
வாழி’ என்கிற மங்களாசாசன
ஒலிகள் கிளர என்னுதல். 1திவ்விய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய
மங்களாசாசனம் என்று இருக்கிறார், திவ்விய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே. ஏத்த
ஏழ் உலகும் பொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? தண்டும் வாளும் எழ- ‘தூசித்தலையில் அவர்களே
2கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று பேரணியும் குலைந்து மேல்
விழுமாறுபோலே; ‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி; ஒருவர்க்கு இட்ட
சோற்றைப் பலர் ஆசைப்படுமாறு போலேகாணும் இவர்கள் படுகிற பாடு. 3அநுகூலன் வந்து
புகுர, ‘கொல்லத்தக்கவன்’ என்கிறவர்கள் பிரதிகூலர் உள்ள இடத்தில் பேசாது இரார்கள் அன்றோ?’
4‘என்இது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்ட அளவாய்’ என்று
நமுசி வந்து, ‘என் தந்தை உன் வஞ்சநம் அறிந்திலன்; நீ முன்பு போலே நின்று அளக்கவேணும்’
என்று திருவடிகளைக் கட்டிக்கொண்டு கிடந்தான் அன்றோ? 5அன்றே பிறந்து அன்றே
வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய? ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி.
6‘சீராற்பிறந்து’ என்கிறபடியே, ‘உன்
_____________________________________________________________________
1. அதற்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார், ‘திவ்விய ஆயதங்களிலும்’ என்று
தொடங்கி. மங்களாசாசனம் செய்ததற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘ஏத்த’ என்று
தொடங்கி. இது, திருவாய். 2. 2,11.
2. கை தொடராய்-கை விடாதவராய்.
பேரணி-சேனையின் வியூகம். இதற்கு ஒரு
திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘ஒருவர்க்கு’ என்று தொடங்கி.
3. இடம் அல்லாத இடத்திலும்
அஞ்சினதற்கு உதாரணமாக விதுராழ்வானைக்
காட்டினார் மேல். இங்குச் சுக்கிரீவனைக் காட்டுகிறார்,
‘அநுகூலன்’ என்று
தொடங்கி. அநுகூலன்-ஸ்ரீவிபீஷணாழ்வான். ‘கொல்லத்தக்கவன் என்கிறவர்கள்’
என்றது,
சுக்கிரீவன் முதலாயினோரை.
4. ‘ஆயின், இங்குப் பிரதிகூலர்
உளரோ?’ என்ன, ‘உளர்’ என்கிறார், ‘என்னிது’ என்று
தொடங்கி. ‘என்னிது’ என்பது. பெரியாழ்வார்
திருமொழி. 1. 9 : 8.
5. ‘பரிவதற்குக் காரணம்
ஈஸ்வரனுடைய சௌகுமார்யம் முதலான வைலக்ஷண்யங்கள்,’
என்று அருளிச்செய்தார் இதுகாறும். இனி, பரிவதற்கு
வேறும் ஒரு காரணத்தை
அருளிச்செய்கிறார், ‘அன்றோ’ என்று தொடங்கி.
6. அன்றே
பிறந்து அன்றே வளர்ந்த செயலுக்குப் பரிந்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘சீராற்பிறந்து’
என்று தொடங்கி. இது பெரிய
|