ய
168 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
யாகவும். அப்பன் உலகம்
1கொண்டவாறே - ‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம்
இருந்தபடி என்?’ என்னுதல்: அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல்.
அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம். அப்பன் - ‘இந்திரனுக்கு இராயச்சித்தைக்
கொடுத்த செயலாலே எனக்கு 2ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.
697
ஆரு மலைக்குஎதிர்ந்து
ஒடும் ஒலிஅர
வூறு சுலாய்மலை தேய்க்கும்
ஒலிகடல்
மாறு சுழன்று
அழைக் கின்ற ஒலிஅப்பன்
சாறு படஅமு தம்கொண்ட
நான்றே.
பொ - ரை :
‘தேவர்களுக்குத் திருவிழா உண்டாகும்படி எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் கொண்ட
காலத்தில் ஆறுகள் எல்லாம் தாம் பிறந்து வந்த மலைகளை நோக்கி எதிர்த்து ஒடுகின்ற ஒலியும்,
வாசுகி என்னும் பாம்பினது உடலைச் சுற்றி மந்தரம் என்னும் மலையானது தேய்கின்ற ஒலியும், திருப்பாற்கடலானது
இடம் வலமாக மாறிச் சுழன்று அழைக்கின்ற ஒலியும் உண்டாயின,’ என்றவாறு.
வி - கு :
‘கொண்ட நான்று ஒலி ஒலி ஒலி உண்டாயின’ என்க. ‘உண்டாயின’ என்னும் வினைச்சொல் ஒன்றைக்
கொணர்ந்து முடிக்க. நான்று - காலம். அரவு - ஈண்டு வாசுகி, ஊறு - உடல். சுலாய் - சுற்றி.
ஈடு : இரண்டாம்
பாட்டு. 3திருப்பாற்கடலைக் கடைந்த ஆச்சரியமான காரியத்தைச் சொல்லுகிறார்.
______________________________________________________________
1. ‘கொண்டவாறே’ என்பதற்கு
இரண்டு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
முதற்பொருளில் ஏகாரம் ஆச்சரியத்தின்கண் வந்தது.
இரண்டாவது பொருளில்
ஏகாரம் அசைநிலை.
2. ‘ஆத்துமாவைத் தந்தான்’
என்றது, ‘தந்தையானான்’ என்றபடி.
3. ‘சாறுபட
அமுதம் கொண்ட நான்று’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|