ஆறு ம
|
நான்காந்திருவாய்மொழி - பா. 1 |
169 |
ஆறு மலைக்கு எதிர்ந்து
ஓடும் ஒலி- 1கடலிலே மந்தர மலையை நட்டவாறே கடல் கொந்தளித்து, மலை போய்த்
தாழ்ந்து கொடுத்தது; 2நீரானது தாழ்ந்தவிடத்தே ஓடக் கடவதன்றோ? ஆறுகளானவை
மலையைக் குறித்து எதிரிட்டு ஓடுகிற போதை ஒலியானது இவர்க்குச் செவியிலே படுகிறபடி. 3இவர்க்கு
முக்காலத்திலும் உள்ளன எல்லாம் தெரியும்படி அன்றோ அவன் வெளிச்சிறப்பித்தது? அரவு ஊறு
சுலாய் மலை தேய்க்கும் ஒலி - வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசரவென்கிற
ஒலியும். ஊறு - உடம்பு. சுலாய் - சுற்றி. கடல் மாறுசுழன்று அழைக்கின்ற ஒலி - மந்தர மலைய்க்
கொடுபுக்கு நட்டுத் திரித்த போது, 4கீழ்க்கடல் மேற்கடலாய்க் கிடாய்ப்
பாய்ச்சல் போலே திரையோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும், அப்பன் - உபகாரகன். 5சாறு
பட - கடலிலே நீர் கோதாம்படி பிரயோஜனமான அமிருதம் உண்டாக. என்றது, ‘நீரிலே ரசமான பசை
பட’
_____________________________________________________________________
1. ‘ஆறுகள் மலைக்கு எதிரே
ஒடுகைக்குக் காரணம் யாது?’ என்ன, ‘கடலிலே’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘போய்-மிகவும்.
2. ‘மலை தாழ்ந்தால் அங்கே
நீர் ஓட வேண்டுமோ?’ என்ன, ‘நீரானது’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. ‘முன்னே நடந்த செயலின்
ஒலி இப்போது இவர்க்குச் செவிப்படக் கூடுமோ?’
என்ன, இவர்க்கு’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். வெளிச்
சிறப்பித்தது-தெளிந்த ஞானத்தைக் கொடுத்தது.
4. ‘கீழ்க்கடல் மேற்கடலாய்’
என்றது, ‘கீழைக்கடலின் நீர் மேற்கே செல்ல,
மேலைக்கடலின் நீர் கிழக்கே வர’ என்றபடி. கிடாய்ப்
பாய்ச்சல்-ஆட்டுக்கிடாயின்
போர்.
‘அருகோடி நீங்கா
தணைதலு மின்றித்
திரிகோட்ட மாஇரியச்
சீறிப் - பொருகளம்
புக்கு மயங்கப்
பொருது புறவாயை
நக்குமால் நல்ல
தகர்.
என்பது, புறப்பொருள் வெண்பா
மாலை,
‘கருவொடும் ஒன்றோடு
ஒன்று காரணம் இன்றிச் சீறிப்
பொறியுடைக் குறும்பூழ்
தம்மிற் போர்செயத் தாக்கு மோதை
செறிமயிர்த் தகர்கள்
தம்மில் தீஏழத் தாக்கல் நோக்கி
அறைகழல் லீரர் ஆர்க்கும்
அமலையை அவிக்கும் அன்றே.’
என்பது, நைடதம்.
5. சாறு-சாரம்;
அமிருதம். ‘சாறு’ என்பதற்கு இரண்டாவது பொருள், ‘திருவிழா’ என்பது.
|