முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

முதல் திருவாய்மொழி - பா. 2

17

    என்னை ஆளும் வன் கோ - 1என்னை நோக்குவாய் நீயாய், பணி கொள்வார் வேறே சிலர் ஆவதே! அத்தலை இத்தலை ஆயிற்றுக் காண். 2ஈஸ்வரன் என்பான் ஒருவன் உண்டாய், அவனுக்கு ஆத்துமா சேஷமாய், அவனுக்கு மனம் அந்தரங்கத் துணையாய், அதற்கு இந்திரியங்கள் சேஷமாகை தவிர்ந்து கலகத்தில் பள்ளிகள் போலே என்னை இந்திரியங்கள் ஆளும்படி ஆவதே! வன்கோ - 3பிரபலருமாய் வந்தேறிகளானவர்களுக்குப் பணி செய்து வெறுத்தேன். 4‘கோவாய் ஐவர் என்மெய் குடி ஏறிக் ‘கூறை சோறு இவை தா,’ என்று குமைத்துப் போகார்’ என்கிறபடியே. 5அன்றிக்கே, ‘ஒரு நீர்மையுடையவன் சேஷியாகை தவிருவதே’ என்னுதல். என்றது, ‘எல்லா நற்குணங்களையுமுடைய சர்வேஸ்வரன் சேஷியாகை தவிர்ந்து, குணம் இல்லாதவர்கள் சேஷிகள் ஆவதே?’ என்கிறார் என்றபடி. ஓர் ஐந்து - 6குணப்பிரதாந பாவத்தால் அன்றிக்கே, சமப்பிரதாநமாய் நலிகிறபடி. 7கடவான் ஒருவனாய், பணி செய்வதும் அவனுக்கான நிலை குலைந்தது. என்றது, ‘பதிம் விஸ்வஸ்ய’ - ‘உலகத்திற்குத் தலைவன்’ என்றும். ‘அனைத்துலகு

_________________________________________________________________________

1. ‘ஆளும்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘என்னை’ என்று தொடங்கி.
  ‘அத்தலை இத்தலையாயிற்று’ என்றது, ஈஸ்வரன் ஆளுதல் தவிர்ந்து இந்திரியங்கள்
  ஆளுதல்.

2. அதனை விவரணம் செய்கிறார், ‘ஈஸ்வரன்’ என்று தொடங்கி.

3. ‘வன்கோ’ என்றது, ‘வலியாலே கோ’ என்றாய்., இடையிலே வந்தது என்கிறார்,
  ‘பிரபலருமாய்’ என்று தொடங்கி.

4. ‘வந்தேறி’ என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘கோவாய்’ என்று தொடங்கி. இது
  பெரிய திருமொழி, 7. 7 : 9.

5. ‘வன்’ என்பதற்கு, ‘பலாத்காரமாக’ என்று பொருள் அருளிச்செய்கிறார்; ‘மனத்தின்
  வன்மை’ என்று வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று
  தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘என்றது’ என்று தொடங்கி.

6. குணப்பிரதான பாவத்தால் என்றது, அப்பிரதான பாவத்தால் என்றபடி. அதாவது,
  நலிகிற காலத்தில் ஒன்று பிரதானமாய் நலிதலும் மற்றொன்று அப்பிரதானமாய்
  நலிதலுமின்றிக்கே, எல்லாம் ஓரே தன்மையாக நலிதலைக் குறித்தபடி. இதனையே
  அருளிச்செய்கிறார், ‘சமப்பிரதானமாய் நலிகிறபடியே’ என்று. ஈண்டுக் குணம்
  என்பதற்கு, அப்பிரதானம் என்பது பொருள். ‘குணம்’ என்பது அப்பிரதானம் என்ற
  பொருளைக் காட்டுதலைக் ‘குணோப்ரதாநே ரூபாதௌ’ என்ற நிகண்டால்
  தெளிதல் தகும்.

7. ‘ஆளும் ஐந்து’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘கடவான் ஒருவனாய்’
  என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘என்றது’ என்று தொடங்கி.