முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

170

திருவாய்மொழி - ஏழாம் பத்து

என்றபடி. அன்றிக்கே, சாறு என்று திருவிழாவாய், ‘தேவசாதிக்குத் திருவிழா உண்டாம்படியாக’ என்னுதல்; சாறு பட - என்றபடி. அமுதம் கொண்ட நான்றே -திருப்பாற்கடல் கடைந்து அமுதம் கொண்ட காலத்தில் இவை எல்லாம் உண்டாயின.

(2)

                  698

        நான்றில ஏழ்மண்ணுந் தானத்த வேபின்னும்
        நான்றில ஏழ்மலை தானத்த வேபின்னும்
        நான்றில ஏழ்கடல் தானத்த வேஅப்பன்
        ஊன்றி இடந்துஎயிற் றில்கொண்ட நாளே.

   
பொ-ரை: ‘என் அப்பன் வராக அவதாரத்தைச் செய்து பூமியைக் குத்தி இடந்து தன் கொம்பிலே கொண்ட காலத்தில் ஏழு தீவுகளும் நழுவாமல் அந்த அந்த இடங்களிலே உள்ளவாயின; அதற்கு மேல், ஏழு மலை சலித்தல் இல்லாதனவாய்க்கொண்டு அந்த அந்த இடங்களிலே இருப்பனவாயின; அதற்குமேல், ஏழு கடல்களும் உடைந்து ஓடாமல் அந்த அந்த இடங்களிலே இருப்பனவாயின,’ என்றபடி.

    வி-கு :
‘ஏழ் மண்ணும்’ என்றது, ஏழு தீவுகளைக் குறித்தபடி, நாலுதல் -தொங்குதல். ‘நான்றில’ என்றது, ‘ஒவ்வொன்றும் தனது தனது நிலையினின்றும் மாறிற்று இல்லை’ என்றபடி.

    ஈடு :
மூன்றாம் பாட்டு. 1மஹாவராஹ அவதாரத்தின் செயலை அருளிச்செய்கிறார். 

    நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே-ஏழு பூமியும் நாலாதபடி எடுக்கை. என்றது, ‘ஏழு தீவுகளாய் இருக்கின்ற பூமியை எடுக்கச் செய்தே, ஒன்றும் நாலாதே முன்பு போலே தன்தன் இடத்திலே கிடக்கும்படி. இவன் பெரிய 2யானைத் தொழிலைச் செய்யாநிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற, உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி. 3ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்கு

______________________________________________________________

1. ‘அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள்’ என்பதனைக்
  கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. யானைத்தொழில் - மனிதச் செயலுக்கு அப்பாற்ப்பட்ட செயல். முன்பு
  போலே - படைப்புக்காலம் போலே.

3. ‘அவ்வாறு செல்லுவதற்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஆதாரமானவன்’ என்று தொடங்கி.