முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1அ

172

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    1அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசியறத்தத்தம் இடத்திலே நின்றன.

(3).

                   699 

        நாளும் எழநிலம் நீரும் எழவிண்ணும்
        கோளும் எழஎரி காலும் எழமலை
        தாளும் எழச்சுடர் தானும் எழஅப்பன்
        ஊளி எழஉல கம்உண்ட ஊணே.

   
பொ-ரை : நாள்களின் கூறுபாடு குலையவும், நிலம் தண்ணீர் இவற்றின் கூறுபாடு குலையவும், ஆகாயம் கிரகங்கள் இவற்றின் கூறுபாடு குலையவும். நெருப்புக் காற்று இவற்றின் கூறுபாடு குலையவும். மலைகள் வேரோடு பறிந்து விழவும், சூரிய சந்திரர்களுடைய கூறுபாடு குலையவும், என் அப்பன் ஒலி உண்டாகும்படியாக உலகத்தை உண்ட ஊண் இருந்தது.

    வி-கு :
‘எழ’ என்றது, தத்தம் நிலையினின்றும் நீங்குதலைக் குறித்தது. ஊளி-ஒலி. எழ-கிளர.

    ஈடு :
நான்காம் பாட்டு. மஹா பிரளயத்தில் காத்த பிரகாரத்தை அருளிச்செய்கிறார். அன்றிக்கே, ‘‘இப்போது இருப்பது போன்று மார்க்கண்டேயன் திருவயிற்றுள் ஒன்றும் அழியாது இருக்கக் கண்டான்’ என்கிற புராணத்துக்குத் தகுதியாக அவாந்தர பிரளயத்தை இவ்விடத்தே அருளிச்செய்கிறாரகவுமாம்,’ என்று அருளிச்செய்வர்.

    நாளும் எழ - 3கால நியதி போக. 4‘அக்காலத்தில் பகல் இல்லை; இரவு இல்லை; ஆகாயம் இல்லை; பூமி இல்லை; இருள்

_______________________________________________________________

1. மேல் கூறியவற்றையெல்லாம் கூட்டி முடிக்கிறார், ‘அசையாத’ என்று
  தொடங்கி.

2. ‘உண்ட’ என்பது பொதுச்சொல் ஆகையாலே, அதற்கு ‘அவாந்தரபிரளயம்’
  என்றும், ‘மஹாபிரளயம்’ என்றும், இரண்டு வகையாகவும் பொருள்
  அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘ததபஸ்யம் அஹம் ஸர்வம் குகௌ தஸ்ய மஹாத்மா;’ என்றதனைத்
  திருவுள்ளம் பற்றி, ‘திருவயிற்றினுள்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. ‘நாளும் எழ’ என்றது பொருந்துமோ? காலம் நித்தியம் அன்றோ?’ எனின்,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘கால நியதி போக’ என்று.

4. காலநியதிகள் இன்னது என்னுமதனையும், அந்நியதிக்குக் காரணம் இன்னது
  என்னுமதனையும், காரணமாக இருப்பவன் உள்ளே புகுருகையாலே
  காரியமான இந்நியதியும் போம் என்னுமதனையும் முறையே
  அருளிச்செய்கிறார், ‘அக்காலத்தில்’ என்று தொடங்கி.