முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1

174

திருவாய்மொழி - ஏழாம் பத்து

1‘உயிர் ஏய் பிரகிருதி’ என்கிறார், ஆத்துமாக்களோடு கூடியுள்ள பிரகிருதி என்று தோற்றுகைக்காக. விண்ணும் கோளும் எழ-ஆகாயமும் அங்குள்ள கிரகங்களும் எழ. எரி காலும் எழ - நெருப்பும் காற்றும் போக. மலை தாளும் எழ-மலைகள் அடியோடே பறிந்து உள்ளே புக. என்றது, ‘வேர்க்குருத்தோடோ பறிய’ என்றபடி. சுடர்தானும் எழ-சொல்லப்படாத ஒளிப்பொருள்களும் உள்ளேபுக. அப்பன் ஊளி எழ-ஒலி உண்டாக. என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் கலகங்கள் உண்டானால் நம்முடைய 2அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம் போலே, திருவயிற்றிற்புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர’ என்றபடி. அன்றிக்கே, ‘‘இவற்றை உரிஞ்சுகிற போதை ஒலிகாண்!’ என்று அம்மாள் பணிக்கும்படி’ என்று அருளிச்செய்வர்’ அதனால் நினைக்கிறது, 3ஈஸ்வரத்வப் பிடரால் அன்றியே பத்தும் பத்தாக அடியார்களைக் காப்பாற்றுதலேயாய் இருக்கிறபடி.

(4)

                   700 

        ஊணுடை மல்லர் தகர்த்த ஒலிமன்னர்
        ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலிவிண்ணள்
        ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலிஅப்பன்
        காணுடைப் பாரதம் கையறை போழ்தே.

   
பொ-ரை: ‘என் அப்பன், காட்சிக்கு இனியதான மஹாபாரதப் போரை அணி வகுத்தப் போர் செய்த காலத்தில், சிறந்த உணவுகளை உண்டு வளரந்த மல்லர்கள் நெரிந்து விழுகிற ஒலியும். அசுரர்களுடைய ஆண்மை மிகுந்த சேனைகள் நடுங்குகின்ற ஒலியும், ஆகாயத்திலே பெருமை மிகுந்த தேவர்கள் வெளிப்படையாய் நின்று காண்கிற காலத்தில் செய்கின்ற ஒலியும் தோன்றின,’ என்றபடி.

________________________________________________________________

1. ‘இதுதான் காரணத்திலே போகாமைக்காக’ என்றதனை விவரணம் செய்கிறார்,
  ‘உயிரே’ என்று தொடங்கி. என்றது, ‘மாமாயை’ என்று மூலப்பகுதியைச்
  சொல்லுச்செய்தே, ‘உயிர் ஏய் பிரகிருதி’ மீண்டும் பிரகிருதியைச் சொன்னது,
  ‘இந்தக் காரியமான சரீரத்திலே காரணமான மூலப்பகுதி சேர்ந்திருக்கிறது
  என்று தோன்றுகைக்காக,’ என்றபடி. ஆக, இதனால், ‘காரியங்களிலும்
  காரணாமிசம் சேர்ந்திருக்கும்’ என்றபடி.

2. ‘அடைய வளைந்தான்’ என்பது, திருவரங்கம் பெரிய கோயிலிலுள்ள ஒரு
  திருவீதியின் பெயர்.

3. ஈஸ்வரத்வப் பிடர்-இறைவனாதலால் உளதாய செருக்கு.