கண
176 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
கண்ணுக்குத் தோற்றும்படி
நின்று துதிக்கிற ஒலி. 1இந்த அந்தரசாதிகளைத் தன்னுடனே ஒருசேர எண்ணலாம்படி தன்னைத்
தாழவிட்டு வைக்குமே தன் சௌலப்பியத்தாலே! 2‘அவன் பிரமன்; அவன் சிவன், அவன்
இந்திரன்,’ என்று ஒரு கோவையிலே எண்ணலாம்படி இருக்கிறவர்கள். அப்பன்-பூபாரத்தை நீக்கிய
உபகாரகன். காணுடைப் பாரதம் கைஅறை போழ்தே-கண் முதலான கரணங்களைப் படைத்ததற்குப் பிரயோஜனம்
அற்றை நிலையைக் காண்கை அன்றோ? 3சேனையின் தூளியும், கையும் உழவுகோலும் சிறு
வாய்க்கயிறுதம், நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற நிலை அன்றோ அது? காணுதற்கு இனிய பாரதம்.
கை அறை போழ்து - 5கையும் அணியும் வகுத்து அங்கோடு இங்கோடு உலாவிப் படைபொருத்தி,
‘நீங்கள் இன்னபடி செய்யக் கடவீர்கோள்! நாங்கள் இன்னபடி செய்யக்கடவோம்’ என்று கைதட்டி
விட்ட போது இந்த ஒலி எல்லாம் உண்டாயின.
(5)
701
போழ்து மெலிந்தபுன்
செக்கரில் வான்திசை
சூழும் எழுந்துஉதி
ரப்புன லாமலை
கீழ்து பிளந்தசிங்
கம்ஒத்த தால் அப்பன்
ஆழ்துயர் செய்துஅசு
ரரைக்கொல்லு மாறே.
______________________________________________________________
1. ‘ஈஸ்வர அபிமானிகளாய்
இருக்கிற மற்றைத் தேவர்களைச் சர்வேஸ்வரனோடு
ஒக்க எண்ணலாமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இந்த
அந்தர சாதிகளை’ என்று தொடங்கி. ‘அந்தரசாதி’ என்பதற்கு, ‘ஆகாசத்திலே
பிறந்தவர்கள்’ என்பது நேர்ப்பொருள்; ‘தாழ்ந்த ஜாதி’ என்பது
தொனிப்பொருள்.
2. ‘ஏண்’ என்பதற்கு, எண்ணுதல்
என்ற இரண்டாவது பொருளை
அருளிச்செய்கிறார், ‘அவன் பிரமன்’ என்று தொடங்கி.
‘ஸபிரஹ்மா ஸஸிவ:
ஸேந்த்ர;’ என்பது நாராயண சூக்தம்.
3. ‘அற்றை நிலையை’ என்பதனை
விவரணம் செய்கிறார், ‘சேனையின் தூளியும்’
என்று தொடங்கி.
4. இந்நிலைக்கு உபேயத்துவமாத்திரமன்றிக்கே,
உபாயத்துவமும் உண்டு
என்கிறார், ‘மாம்’ என்று தொடங்கி. ‘கையும் உ.ழவுகோலும், பிடித்த
சிறுவாய்க்கயிறும். ஸேநாதூளி தூசரிதமான திருக்குழலும், தேருக்குக் கீழே
நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை
‘மாம்’ என்று
காட்டுகிறான்’ என்பது, முமுக்ஷூப்படி சரமஸ்லோகப்ரகரணம், சூ. 33.
5. ‘கை அறை போழ்து’ என்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘கையும்
அணியும்’ என்று தொடங்கி. கையறைகை-கை
தட்டுதல். கையும் அணியும்
வகுத்து-சேனையை வியூகம் வியூகங்களாகப் பிரித்து.
|