702
நான்காந்திருவாய்மொழி - பா.
7 |
179 |
702
மாறு நிரைத்திரைக்
குஞ்ச ரங்களின்
நூறு பிணம்மலை
போற்புர ளக்கடல்
ஆறு மடுத்துஉதி
ரப்புன லாஅப்பன்
நீறு படஇலங் கைசெற்ற
நேரே.
பொ-ரை :
‘எதிர் எதிராக நிரைத்து ஒலிக்கின்ற பாணங்களாலே இனம் இனமாக நூற்றுக்கணக்கான பிணங்கள்
மலைகளைப் போன்று புரண்டு விழவும் கடலானது இரத்தத்தாலே நிறைந்து ஆறுகளிலே புக அதனாலே ஆறுகள்
எல்லாம் உதிரப்புனல் ஆகும்படியும், என்னப்பன் இலங்கையானது சாம்பலாகும்படி அழித்த நேர்மை
இருந்தது,’ என்றபடி.
வி-கு :
‘அப்பன் இலங்கை செற்ற நேர். பிணம் மலைபோற்புரளவும், கடல் ஆறு மடுத்து உதிரப்புனல் ஆகும்படியும்
இருந்தது’ என்க. ‘(குருதியாகிய) ஆறு மடுத்துக் கடல் உதிரப்புனலா’ எனலுமாம்.
ஈடு : ஏழாம்
பாட்டு. 1இராம விருத்தாந்தத்தை அருளிச்செய்கிறார்.
மாறு நிரைத்து
இரைக்கும் சரங்கள் - 2சாரிகை வந்த சடக்கு, நாலு திசைகளிலும் விட்ட அம்புகள்
எதிர் அம்பாய் ஒன்றோடு ஒன்று பொருது கலார் கலார் என்று ஒலிக்கின்ற ஒலி, கடல் இரைத்தாற்போலே
இராநின்றது. சாரிகை வந்த சடக்கு, தன்னில்தான் எதிரம்பு கோத்ததுகாணும். இனநூறு பிணம் மலை
போல் புரள- 3நூறு நூறாக இனம் இனமான பிணங்களானவை, அம்பு பட்டு உருவின சடக்காலே
உயிர் ஓரிடத்து ஒதுங்கப்பெறாதே இரண்டு துண்டங்களிலும் கலந்து மலை போலே கிடந்து துடிக்கிறபடி.
கடல் ஆறு மடுத்து உதிரப்புனலா - 4‘தண்ணீர் கூட்டம் தானாய்
________________________________________________________________
1. ‘இலங்கை செற்ற நேரே’
என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. சரங்கள் மாறாக நிரைத்து
இரைக்கும் பிரகாரத்தை அருளிச்செய்கிறார்,
‘சாரிகை’ என்று தொடங்கி. சாரிகை வந்த சடக்கு-மண்டலாகாரக்
கதியின்
வேகம். மாறு-எதிர். நிரைத்து-கலந்து.
3. பிணங்கள் புரளுவதற்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார், ‘நூறு நூறாக’
என்று தொடங்கி. சடக்கு-வேகம்.
4. ‘கடல் ஆறு மடுத்து’ என்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘தண்ணீரின்’
என்று தொடங்கி.
‘ஆபூர்ய மாணம் அசலப்ர திஷ்டம்’
என்பது, ஸ்ரீகீதை, 2:70.
‘அசலப்ர திஷ்டம்’ என்றது, ‘கரையைத் தாண்டாது’ என்றபடி.
|