New Page 1
18 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
முடைய அரவிந்த லோசனன்’
என்றும் சொல்லுகிறபடியே ஒருவன் சேஷியாதல் தவிர்ந்ததன்றோ என்றபடி. 1‘ஒருவனுக்குச்
சேஷமாதல் தவிர்ந்தது’ என்பார், ‘ஐந்து’ என்கிறார்.
இவை பெய்து -
2அவற்றின் பக்கல் குறை உண்டோ? அவற்றை இட்டு நலிவிக்கிறாய் நீ அல்லையோ? 3ஸ்ரீபிரஹ்லாதனை
பாம்புகளைக் கூட விட்டுக் கட்டி நலிந்தாற்போலே இருக்கிறதுகாணும், இவற்றை உண்டாக்கி என் பக்கலிலே
நீ விட்டது. இராப்பகல் மோதுவித்திட்டு - 4காலத்துக்கு உபயோகம் இதுவே ஆவதே!
‘ஒழிவில் காலமெல்லாம்’ என்று அழகிதாக அடிமை செய்ய ஆசைப்பட்டேன். 5‘அடியார்கள்
குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று ஆசைப்பட்ட எனக்கு இவற்றினுடனே கூடும்படி ஆவதே!’ உன்னை
நான் - பெற்றல்லது தரிக்க ஒண்ணாதபடியிருக்கிற உன்னைக் கிட்டி அல்லது பிழைக்க மாட்டாத நான்.
என்றது, 6‘நிரதிசய போக்கியனான உன்னை, புசித்து அல்லது பிழைக்கமாட்டாத நான்’
என்றபடி. அணுகா வகை செய்து - கிட்டாதபடி செய்து. போதி கண்டாய் - 7உன்னை அனுபவிக்க
வேணும் என்று போந்த பிராட்டியை மாய மானைக் காட்டிப் பிரித்து, ஒற்றைக்கண்ணன், ஒற்றைக்காதள்
_________________________________________________________________________
1. ‘ஒருவனுக்குச் சேஷமாதல்
தவிர்ந்தது’ என்றதற்குக் கருத்து, ‘தகுதியில்லாததாகிலும்
ஒரு பொருளுக்கே அடிமை ஆகலாமன்றோ?
அதுவும் தவிர்ந்தது,’ என்றபடி.
2. அவற்றை அசேதனமாகச்
சொல்லி, நலிகிறவனை ஈஸ்வரனாகச் சொல்லுவதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘அவற்றின் பக்கல்’
என்று தொடங்கி.
3. இதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார், ‘ஸ்ரீபிரஹ்லாதனை’ என்று தொடங்கி.
கம்பராமாயணம், இரணியன் வதைப்படலம், 87 முதல்
உள்ள மூன்று செய்யுள்களை
ஈண்டுக்காண்க.
4. ‘இராப்பகல்’ என்பதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘காலத்துக்கு’ என்று தொடங்கி.
அதனால் பலித்த பொருளை
அருளிச்செய்கிறார், ‘ஒழிவில் காலம்’ என்று தொடங்கி.
இது, திருவாய்மொழி, 3. 3 : 1.
5. ‘இவை பெய்து’ என்றதனைக்
கடாட்சித்து பாவம் அருளிச்செய்கிறார், ‘அடியார்கள்’
என்று தொடங்கி. இது, திருவாய்மொழி,
2. 3 : 9.
6. நிரதிசய போக்கியன்
- நிரதிசயம் - இனிமையில் தனக்குமேல் ஒன்று இல்லாதது;
போக்கியன் - இனியன். ‘எல்லையில்லாத
இனியன்’ என்றபடி.
7. ‘நான் உன்னைக் கிட்டாதபடி செய்து கடக்கப் போனாய்’, என்னுமதனைத்
திருஷ்டாந்தம் மூலமாக அருளிச்செய்கிறார்,
‘உன்னை’ என்று தொடங்கி.
|