ந
180 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
நிறைந்திருக்கிறதாயும்
ஒரேவிதமாயும் இருக்கிற கடல்’ என்றபடியே, 1புக்க எல்லாம் கொண்டிருக்கக்கூடிய கடல்,
இரத்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே மடுக்கும்படி. 2‘வையமூடு பெருநீரில் மும்மை
பெரிதே’ என்றார் அன்றோ? நீறு பட 3‘சுடுகாட்டுக்கு ஒப்பாக’ என்று சொன்னபடியே,
சாம்பலாகும்படியாக. இலங்கை செற்ற 4நேரே - இலங்கை செற்ற பொழுது. ‘நேர்’ என்பது,
‘நேரம்’ என்று காலத்தைக் காட்டுவதாம். ‘இலங்கை செற்ற பொழுது மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’
என்பது அந்வயம். அன்றிக்கே, ‘இலங்கையைச் செற்ற வாய்ப்பு’ என்னுதல். அன்றிக்கே, ‘மாயாப்
பிரயோகத்தால் அன்று, செவ்வைப் பூசலிலே நின்றுகாண் இலங்கையை அழித்தது’ என்னுதல். நேர் -
நேராக என்றபடி. அப்போது, ஏகாரம்: தேற்றகாரம். ‘நேர்மையாலே இலங்கை செற்றது’ என்றபடி.
(7)
703
நேர்சரிந் தான்கொடிக்
கோழிகொண் டான்பின்னும்
நேர்சரிந் தான்எரி
யும்அன லோன்பின்னும்
நேர்சரிந் தான்முக்கண்
மூர்த்திகண் டீர்அப்பன்
நேர்சரி வாணன்திண்
தோள்கொண்ட அன்றே.
பொ-ரை :
‘என்னப்பன், எதிரிட்டு வந்து தோற்ற வாணனுடைய வலிய தோள்களை அழித்த காலத்தில்,
கோழிக்கொடியையுடைய முருகன் எதிரிட்டுத் தோற்றான்; அதற்குமேல், எரிகின்ற அக்கினி தேவனும்
தோற்றான்; அதற்கு மேலே, மூன்று கண்களையுடைய சிவபெருமானும் தோற்றான்’ என்றபடி.
வி-கு :
கண்டீர்-முன்னிலை அசைச்சொல், நேர் சரிதல்-எதிர்த்துத் தோற்றல். கோழிக்கொடி, முருகனுக்கு
உரியது.
_______________________________________________________________
1. ‘அபூர்யமாணம்’ என்றதனையும்
கூட்டிப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘புக்க’ என்று தொடங்கி. ஆறு மடுத்து - ஆறுகளிலே
புகுந்து.
2. இரத்தவெள்ளம் நிரம்பியதற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘வையைமூடு’
என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி. 11. 4 : 4.
3. ‘சிதா தூமாகுலபதா
க்ருத்ர மண்டல ஸங்குலா
அசிரேணைவ லங்கா இயம்
ஸ்ஸஸாந ஸத்ருஸூ பவேத்’
என்பது, ஸ்ரீராமா, சுந். 26 : 26.
4. ‘நேரே’ என்றதற்கு, மூன்று பொருள்; நேரம் என்ற பொருளிலும், வாய்ப்பு
என்ற பொருளிலும் ‘நேரே’ என்றதில்
ஏகாரம் ஈற்றசை.
|