1அவனும
|
182 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
1அவனும்
பின்னிட்டு ஓடத்தொடங்கினான் என்னுதல்; அன்றிக்கே, ‘நின்றவிடத்தே நின்று முதுகு காட்டினான்’
என்னுதல். திண் தோள் கொண்ட அன்று - 2கையில் ஆயுதம் போகட்டாரையும், மயிர்
விரித்தாரையும் கொல்லக்கடவது அன்று. 3தன்னோடு ஒக்க ஆறல்பீறலாய் இருப்பது ஒரு
தேவதையைப்பற்றி, அரணுக்குள்ளே இருப்பாரைப் போலே திண்ணியனாய் இருந்தானாயிற்று. புருடோத்தமனைப்
பற்றி இருப்பாரைப் போலே, கபாலிகந்தரைப் பற்றி நிர்ப்பரனாய் இருந்தான். 4சர்வேஸ்வரனைப்
பற்றி ‘எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்.
____________________________________________________________________
1. சரிதல் என்பதற்கு,
முரிந்து போதல் என்பதும், முதுகு காட்டுதல் என்பதும் இரு
பொருள். இவ்விரு பொருளையும் முறையே
அருளிச்செய்கிறார், ‘அவனும்’ என்று
தொடங்கியும், ‘நின்றவிடத்தே’ என்று தொடங்கியும்
2. தலையை அறுக்காமல் திண்தோளைக்
கொண்டமைக்கு மூன்று காரணம்
அருளிச்செய்கிறார்; முதற்காரணம், ‘கையில் ஆயுதம்’ என்று தொடங்குவது.
முதுகு
காட்டிய போதே கையில் ஆயுதம் போகட்டமையும் தானே போகதரும். இங்கே,
‘வீறின்மையின் விலங்காமென
மதவேழமும் எறியான்;
எறுண்டவர் நிகராயினும்
பிறர்மிச்சில்என்று எறியான்;
மாறன்மையின் மறம்வாடும்என்று
இளையாரையும் எறியான்;
ஆறன்மையின் முதியாரையும்
எறியான்அயில் உழவன்.’
என்ற சீவக சிந்தாமணிச்
செய்யுள் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.
3. ‘திண்தோள்’ என்ற
இடத்திலேயுள்ள திண்மையை விளக்குகிறார், ‘தன்னோடு’ என்று
தொடங்கி. பலி ஏற்பவனாதலானும்
கந்தையைத் தரித்திருப்பவனாதலானும் ‘ஆறல்
பீறல்’ என்கிறார். மேல் வாக்கியத்தை விவரணம்
செய்கிறார், ‘புருடோத்தமனை’
என்று தொடங்கி.. கபாலிகந்தர் - கபாலத்தைத் தரித்திருப்பவனும்
கந்தையைத்
தரித்திருப்பவனுமான சிவன்.
4. மேல் வாக்கியத்தை விவரணம்
செய்கிறார், ‘சர்வேஸ்வரனை’ என்று தொடங்கி.
‘நபிபேதி குதஸ்சந;’
என்பது, தைத். உப. ஆநந்’.
‘இடராக வந்தென்னைப்
புன்சிறு தெய்வங்கள் என்செயுமான்
இடாரக வன்பிணி மாநாக
மென்செயும் யான்வெருவி
இடராக வன்னி
புனல்இடி கோள்மற்று மென்செயும்வில்
இடராக வன்அரங் கன்திருத்
தாள்என் இதயத்ததே.’
என்பது, திருவரங்கத்தந்தாதி,
39.
|