New Page 1
|
184 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
‘இதர ஸஜாதீயனோ!’ என்று
இருந்தேன்; ‘கழுத்திலே கயிறு இட்ட பின்புகாண் நான் பூனை என்று அறிந்தேன்’ என்பாரைப்
போலே. ‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், ஈஸ்வரனை ஒழிந்தார் அடங்கலும், தாங்கள்
உளரான போது காப்பாற்றுகின்றவர்களாகச் செருக்குக்கொண்டு. ஆபத்து வந்தவாறே இவர்களைக் காட்டிக்
கொடுத்துத் தங்கள் தங்களைக்கொண்டு தப்புவர்கள்; ‘எல்லா நிலைகளிலும் தன்னை அழிய
மாறியாயினும் அடியார்களைக் காப்பாற்றுவான் சர்வேஸ்வரன் ஆகையாலே, அடையத் தக்கவன் இவனே;
அல்லாதார் பற்றத்தக்கவர் அல்லர்,’ என்னும் இடம் சொல்லியபடி.
(8)
704
அன்றுமண் நீர்எரி
கால்விண் மலைமுதல்
அன்று சுடர்இரண்
டும்பிற வும்பின்னும்
அன்று மழைஉயிர்
தேவும்மற் றும்அப்பன்
அன்று முதல்உல
கம்செய் ததுமே.
பொ-ரை :
அப்பன் உலகத்தைப் படைத்ததும் ஆதியான
சிருஷ்டி காலத்திலே; பூமியும் தண்ணீரும் நெருப்பும் காற்றும் ஆகாசமும் மலை முதலான பொருள்களும்
ஆகிற இவற்றைப் படைத்ததும் அக்காலத்திலே; சூரிய சந்திரர்களையும். பிற பொருள்களையும் படைத்ததும்
அக்காலத்திலே; அதற்கு மேலே, மழையையும் உயிர்களையும் தெய்வங்களையும் பிற பொருள்களையும்
படைத்ததும் அக்காலத்திலே.
ஈடு : ஒன்பதாம்
பாட்டு. 1படைப்பும் உலகத்தாரால் செய்யப்படுவது அன்றிக்கே வேறுபட்டது ஒரு செயல்
ஆகையாலே, அதனையும் வெற்றிச்செயலாக அருளிச்செய்கிறாராகவுமாம். அப்பன் முதல் உலகம் செய்ததும்
அன்று - மஹோபகாரகன் முதலிலே உலகத்தை உண்டாக்கிற்றும் ஆதியான படைப்புக் காலத்திலே. அதற்குக்
காரணமாக ‘மண் நீர்’ என்பது முதலாக அருளிச்செய்கிறார். அன்றிக்கே, முன்னும் பின்னும் கிருஷ்ணனுடைய
செயலைப் பற்றி அருளிச்செய்கையாலே, ‘வாணனைத் தண்டித்த அன்றுகண்டீர் உலகத்தை உண்டாக்கினான்’
என்று அதனையே
______________________________________________________________
1. இத்திருப்பாசுரத்திலே
சிருட்டியை அருளிச்செய்வதற்கு இரண்டு வகையாகக்
கருத்து அருளிச்செய்கிறார்: முதல் அவதாரிகை,
இத்திருவாய்மொழியின்
முன்னுரையிற்கூறிய ‘பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்க’ என்றதற்குச்
சேரும்.
|