New Page 1
நான்காந்திருவாய்மொழி - பா. 10 |
185 |
பேசுகிறார் என்னுதல்.
1பயிர் செய்கையே அன்றே வேண்டுவது? பயிர் அழியாமல் நோக்கின அன்றே அன்றோ -
பயிர் செய்ததாவது?
அன்று மண் நீர்
எரி கால் விண் மலை முதல் - 2காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உண்டாக்கினபடி.
சுடர் இரண்டு - சந்திர சூரியர்களை உண்டாக்கினபடி. பிறவும் - மற்றும் உண்டான நக்ஷத்திரங்கள்
முதலான ஒளிப்பொருள்களும். பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் - அதற்கு மேலே மழை பெய்யக்
கடவதான மேகம், மழையாலே உயிர் வாழக்கூடிய ஆத்துமாக்கள், மழையைத் தோற்றுவிக்கின்றவர்களான
தேவர்கள், மற்றும் உண்டான திரியக்குத் தாவரங்கள் முதலானவைகள். அப்பன் - எல்லாப்பொருள்களையும்
தோற்றுவித்தவன். அன்று முதல் உலகம் செய்ததுமே - 3‘தனித்தனியே சொல்லவேணுமோ?
வாணனைந் தண்டித்து ஈர்அரசு அறுத்த அன்றுகண்டீர் இவற்றை எல்லாம் படைத்தது?’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, ‘பெயர் வடிவங்களை இழத்து, 4‘‘சத் ஒன்றே’ இருந்தது என்கிற நிலையில்
5‘பல பொருள்கள் ஆகக் கடவேன்’ என்று நினைத்த அன்று முதல்’ என்றுமாம்.
(9)
705
மேய்நிரை கீழ்புக
மாபுர ளச்சுனை
வாய்நிறை நீர்பிளி
றிச்சொரி யஇன
ஆநிரை பாடிஅங்
கேஒடுங்க அப்பன்
தீ்மழை காத்துக்குன்
றம்எடுத் தானே.
_______________________________________________________________
1. ‘வாணனைத் தண்டித்த அன்றோ
உலகம் உண்டாயிற்று?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘பயிர் செய்கை’ என்று தொடங்கி.
இங்கே,
‘கொலையிற்
கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.’
என்ற திருக்குறள் நினைவு கூர்தல்
தகும்.
2. ஐம்பெரும்பூதங்களும் காரணமாய்,
மலை முதலானவை காரியங்களாகையாலே
அருளிச்செய்கிறார், ‘காரணங்களோடு’ என்று தொடங்கி.
3. ஐம்பூதங்கள் முதலானவற்றை
முன்னே அருளிச்செய்து, உலக சிருட்டியைப்
பின்னே அருளிச்செய்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘தனித்தனியே’
என்று தொடங்கி.
4. ‘ஸதேவ ஸோம்ய இதமக்ர
ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்’
என்பது, சாந்தோக்யம். 6. 2 :
1.
5.
‘பஹூஸ்யாம்’ என்பது, சாந்தோ. 6. 2:3.
|