New Page 1
|
186 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
பொ-ரை :
மேய்க்கின்ற பசுக்கூட்டங்கள் கீழே புகும்படியாகவும், மேலேயுள்ள விலங்குகள் புரண்டு விழும்படியாகவும்,
சுனைகளின் வாயளவும் நிறைந்திருக்கின்ற தண்ணீரானது ஒலித்துக்கொண்டு சொரியும்படியாக, பசுத்திரளும்
ஆயர்பாடியும் அங்கே ஒடுங்கும்படியாகவும், என்னப்பன் கொடிய மழையினின்றும் பசுக்களையும் ஆயர்களையும்
பாதுகாப்பதற்காகக் கோவர்த்தனம் என்னும் மலையைக் குடையாக எடுத்தான்.
வி-கு :
‘புக, புரள, சொரிய, ஒடுங்க, குன்றம் எடுத்தான்’ என்க. பாடி-ஆயர் பாடி.
ஈடு : பத்தாம்
பாட்டு. 1கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்துப் பாதுகாத்த செயலை அருளிச்செய்கிறார்.
மேய் நிரை கீழ்
புக - 2மேய்கிற பசுக்கள் புல்லும் உமிழாதே அசையிட்டுக்கொண்டு கீழே புகுர. மா
புரள - மலையை எடுத்து மறிக்கையலே அங்கு வாழ்கின்ற மிருகங்கள் எல்லாம் புரண்டு விழ. சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய-சுனையிடத்து நிறைந்து நிற்கிற நீரானது, நிறைகுடத்தைக் கவிழப்
பிடித்தாற்போலே ஒலித்துக்கொண்டு சொரிய. 3ஒரு மழை காக்கப் புக்கு அங்கே பல
மழையை உண்டாக்கினபடி. 4இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க - பசுத்திரளும் திருவாய்ப்படியும்
அங்கே ஒடுங்கவும். அப்பன்-ஆபத்திற்குத் துணைவனான உபகாரகன். தீ மழை காத்து - 5கேட்டினை
விளைக்க வந்த மழையாகையாலே ‘தீ மழை’ என்கிறார். 6ஆயர்களும் பசுக்களும்
அன்றிக்கே அன்று தாமே அன்றோ நோவுபட்டார்? குன்றம் எடுத்தானே - 7‘மலையை எடுத்துக்
காத்த
______________________________________________________________________
1. ‘தீ மழை காத்துக் குன்றம்
எடுத்தான்’ என்றதனைக் காடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘மேய் நிரை’ என்றதனை
நிகழ்கால வினைத்தொகையாகக் கொண்டு பொருள்
அருளிச்செய்கிறார், ‘மேய்கிற’ என்று தொடங்கி.
3. ரசோக்தியாக அருளிச்செய்கிறார்,
‘ஒரு மழை’ என்று தொடங்கி.
4. ‘மேய் நிரை’ என்றது,
காட்டில் வசிக்கும் பசுக்களைச் சொல்லுகிறது. ‘இன ஆநிரை’
என்றது, ஊரில் இருக்கும் பசுக்களைச்
சொல்லுகிறது.
5. ‘மழை நல்லது அன்றோ?
‘தீ மழை’ என்பான் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘கேட்டினை’ என்று தொடங்கி.
6. பொதுவிலே, ‘காத்து’
எனக் கூறியதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘ஆயர்களும்’
என்று தொடங்கி.
7. ‘அப்பன்’
என்றதனை நோக்கிக் கருத்து அருளிச்செய்கிறார், ‘மலையை’ என்று
தொடங்கி.
|