ம
நான்காந்திருவாய்மொழி - பா.
11 |
187 |
மஹோபகாரகன்’ என்கிறார்.
1‘பசியினால் உண்டான கோபம் ஆறுந்தனையும் மழை பெய்து போவானுக்கு’ என்று ஏழுநாள்
அன்றோ மலையைத் தரித்துக்கொடு நின்று நோக்கிற்று? இராவணன் முதலானோர்கள் ஆனால் அன்றோ
அழியச்செய்யலாவது? அநுகூலனால் வந்த கேடு ஆகையாலே செய்யலாவது இத்தனையே அன்றோ? ‘இதனால் என்
சொல்லியவாறோ?’ எனின், அடியவன் தப்பினாலும் தான் பொறுத்துக் காப்பாற்றுவான் என்பதனைத்
தெரிவித்தபடி.
(10)
706
குன்றம் எடுத்த
பிரான்அடி யாரொடும்
ஒன்றி நின்றசட
கோபன் உரைசெயல்
நன்றி புனைந்தஓர்
ஆயிரத் துள்இவை
வென்றி தரும்பத்தும்
மேவிக்கற் பார்க்கே.
பொ-ரை :
‘மலையை எடுத்த உபகாரகனான கண்ணபிரானுடைய
அடியார்களோடும் பொருந்தி நின்ற ஸ்ரீசடகோபராலே அருளிச்செய்யப்பட்ட நன்மை பொருந்தி ஒப்பற்ற
ஆயிரம் திருப்பாசுரங்களுள் இவை பத்தும் பொருந்திக் கற்பவர்கட்கு வெற்றியைக் கொடுக்கும்,’
என்றபடி.
வி-கு :
‘இவை பத்தும் மேவிக் கற்பார்க்கு வென்றி தரும்’ என்க.
ஈடு :
முடிவில், 2‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இது தானே வெற்றியைத் தரும்,’
என்கிறார்.
குன்றம் எடுத்த
பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் - 3கோவர்த்தனத்தை
எடுத்துத் தரித்த நீர்மையிலும் அப்போதை அழகிலும் ஈடுபட்டு இருக்குமவர்களோடே கூடிநின்று தாமும்
பிரீதராய், பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுர
_____________________________________________________________
1. அவனை அழிக்காததற்குக்
காரணம் அருளிச்செய்கிறார், ‘பசியினால்’ என்று
தொடங்கி.
2. ‘வென்றி தரும் பத்தும்
மேவிக் கற்பார்க்கே’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. ‘குன்றம்
எடுத்த பிரான் அடியார்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘கோவர்த்தனத்தை’ என்று தொடங்கி.
‘பிரான்’ என்றதனை நோக்கி,
‘நீர்மையிலும்’ என்கிறார். ‘அப்போதை அழகிலும்’ என்றது
மலையை
எடுத்துக்கொண்டு திரிபங்கியாய் நின்ற போதை அழகினை.
|