முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இவர

முதல் திருவாய்மொழி - பா. 2

19

இவர்களை கைகளிலே காட்டிக்கொடுத்து உன்னைக் கொண்டு அகன்றாற்போலேகாண் இதுவும்! கன்னலே அமுதே - 1ஒரு வகையால் வந்த இனிமையாகில் நான் ஆறி இரேனோ? ‘ஸாவகந்த: ஸர்வரச’ என்கிறபடியே, எல்லா விதமான இனிய பொருள்களுமாய், அளவு இறந்து, கொள்ள மாளா இன்பவெள்ளமாய் இராநின்றதே. ‘அமுது’ என்பது, இனிய பொருளுமாய், சாவாமல் காக்குமதுவுமாய் இருப்பது.

    கார்முகில் வண்ணனே - 2அந்த இனிமையைத் தன் பேறாகத் தருமவன்; பரமோதாரன் என்றபடி. அன்றிக்கே, ‘கார் காலத்தில் மேகம் போலே காண்பதற்கு இனியதான வடிவையுடையவனே!’ என்னுதல். கடல் ஞாலம் காக்கின்ற மின்னுநேமியினாய் - 3‘போதி கண்டாய்’ என்று யார் கால் கட்ட நீ அன்று நோக்கிற்று! ‘இந்திரியங்களாலே நோவுபட்டோம்’ என்று இவர்கள் அபேக்ஷித்த பே தோ நீ நோக்கிற்று! 4நீ இனியன் என்று அறியாதரையுங்கூட நோக்குமவன் அல்லையோ? 5கடலோடு கூடின பூமியைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்கும் தன்மையன் அல்லையோ? ‘காத்தல்தான் 6காதாசித்கமோ உனக்கு?’ என்பார், ‘காக்கின்ற’ என்று நிகழ்காலத்தாற்கூறுகின்றார். மின்னு நேமியனாய் - 7‘இயற்றி உண்டு என்னா, சங்கற்பத்தால் நோக்குமவனோ? ஆசிலே வைத்த

_________________________________________________________________________

1. ‘கன்னலே’ என்றது, எல்லா ரசத்துக்கும் உபலக்ஷணமாகக் கொண்டு
  அருளிச்செய்கிறார், ‘ஒரு வகையால்’ என்று தொடங்கி.

2. ‘வண்ணன்’ என்பதற்கு, இரண்டு பொருள்: ‘முகில் போன்று கைம்மாறு கருதாது
  கொடுக்கும் தன்மையன்’ என்பது முதற்பொருள்; அதனாற்பலித்த பொருளை
  அருளிச்செய்கிறார், ‘அந்த இனிமையை’ என்று தொடங்கி.

3. ‘கடல் ஞாலம்’ என்று அஃறிணையாகச் சொன்னதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘போதி கண்டாய்’ என்று தொடங்கி. கால் கட்ட - பிரார்த்திக்க. அதனை விவரணம்
  செய்கிறார், ‘இந்திரியங்களாலே’ என்று தொடங்கி.

4. ‘கன்னலே அமுதே’ என்றதன் பின், ‘கடல் ஞாலம்’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘நீ இனியன்’ என்று தொடங்கி.

5. ‘கடல் ஞாலம் காக்கின்ற’ என்றதற்குப் பதப்பொருள் அருளிச்செய்கிறார், ‘கடலோடு’
  என்று தொடங்கி.

6. காதாசித்கம் - ஒரு காலத்தில் இருப்பது.


7. ‘காக்கின்ற’ என்றதன் பின் ‘நேமியினாய்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘இயற்றி’ என்று தொடங்கி. இயற்றி - ஆற்றல். ஆசிலே - ஆயுதப்பிடியிலே.