முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

707

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 1

193

                    707

    1கற்பார் இராம பிரானைஅல் லால் மற்றும் கற்பரோ?
         புற்பா முதலாப் புல்லெறும் பாதிஒன்று இன்றியே
         நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
         நற்பாலுக்கு உய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.

   
பொ-ரை : ‘நல்ல தேசமான அயோத்தியில் வாழ்கின்ற பரந்த புல் முதலாக, சிறிய எறும்பு முதலாக உள்ள சராசரங்கள் எல்லாவற்றையும் அவற்றின்பக்கல் ஒரு சாதனமும் இல்லாமல் இருந்தும், பிரமனாலே படைக்கப்பட்ட இந்த உலகத்திலே அவை நல்ல தன்மையையுடையனவாம்படி செய்தான்; ஆதலால், கற்கின்றவர்கள் ஸ்ரீராமபிரானுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு சில கீர்த்திகளையும் கற்பார்களோ?’ என்றபடி.

    வி-கு :
‘பா புல் முதலாப் புல் எறும்பு ஆதியா நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் ஒன்று இன்றியே நற்பாலுக்கு உய்த்தனன்,’ என்று கூட்டுக. ‘ஒன்று’ என்றது, அவனை அடைவதற்கு உபாயமாகக் கூறப்பட்ட சாதனங்களில் ஒன்றும் என்றபடி.

    இத்திருவாய்மொழி கலி நிலைத்துறை.

    ஈடு :
முதற்பாட்டு, 2‘பிரியத்தையும் ஹிதத்தையும் நினைத்து ஒன்றைக்கற்பார், திருவயோத்தியில் உண்டான எல்லாப்பொருள்களையும் காரணம் ஒன்றும் இல்லாமலே தன் சேர்க்கையே சுகமாகவும் தன் பிரிவே துக்கமாகவுமுடையராம்படி செய்தருளின உபகார சீலனான சக்கரவர்த்தி திருமகனை அல்லது கற்பரோ?’ என்கிறார்.

    கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ - 3‘இவ்விஷயத்தை ஒழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடல் அன்று,’

_____________________________________________________________

1. ‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
  தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து
  சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
  சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே!
  திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே!’

என்ற சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை) இங்கு நினைவு கூர்க.

2. ‘உய்த்தனன், இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’ என்ற பதங்களைக்
  கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

3. ‘கற்பரோ’ என்ற ஓகாரத்தின் பொருளை அருளிச்செய்கிறார் ‘இவ்விஷயத்தை’
  என்று தொடங்கி. உடல்-காரணம்.