இவற
|
200 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
இவற்றுக்கு ஒரு முதன்மை
சொல்லுகிறார் அல்லர்; ‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்;
1வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே. 2தாவரங்களில் தாழ்ந்தது
புல்; சங்கமங்களில் தண்ணியது எறும்பு; இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞானபலம் மோக்ஷம்
என்றதனைத் தவிர்க்கிறது. 3‘ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று.
பெருமாள் கிருபைக்கு,’ என்கிறது. 4‘இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள்
காரணம் அன்று.’ என்கிறது. 5காரணம் இல்லாமலே சேஷியாக இருக்கிற சர்வேஸ்வரன்
பக்கல் விலக்காமையே பேற்றுக்கு வேண்டுவது. 6ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும்
கண்ணநீர் விழவிட்டு நிற்கக் கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடிநின்றன,
7‘மரங்களும் எல்லாம் வாடி நின்றன’ என்கிறபடியே? 8உப தப்த
_____________________________________________________________________
1. ‘இவை முற்படும்படி என்?’
என்ன, அதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,
‘வெள்ளமானது’ என்று தொடங்கி.
2. அறிவுள்ள பொருள்களைச்
சொல்லாது, அறிவு இல்லாத புல்லையும் எறும்பையும்
சொன்னதனால் போதருவது ஓர் அர்த்த விசேடத்தை
அருளிச்செய்கிறார்,
‘தாவரங்களில்’ என்று தொடங்கி.
3. ‘ஆனால், ஞானம் வேண்டவோ?’
என்ன, ‘ஞானம்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
4. ‘‘ஞாநாந் மோக்ஷ:’ என்னாநிற்க,
ஞானம் வேண்டா என்பான் என்?’ என்ன,
‘மோக்ஷத்திற்குக் காரணமான ஞானம் வேண்டுவதின்று என்பதன்று:
கர்மங்களின்
உயர்வு தாழ்வுகளோடு கூடின ஞானத்தை வேண்டா என்கிறது’ என்கிகிறாக,
‘இவற்றின்’ என்று தொடங்கி.
5. ‘ஆனால், பேற்றுக்கு வேண்டுவது
யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘காரணம் இல்லாமலே’ என்று தொடங்கி.
6. ‘கர்மங் காரணமாக
வருகின்ற ஏற்றத் தாழ்வுகள் பிரயோஜனம் இல்லாதவைகளாய்,
விலக்காமை ஒன்றையே கொண்டு அவன்
கிருபை பலித்த இடம் உண்டோ?’
என்ன, ‘ஸ்ரீபரதாழ்வானை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
7. மரங்கள் வாடி நின்றமைக்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘மரங்கள்’ என்று தொடங்கி.
‘விஷயே தே மஹாராஜ
ராமவ்யஸந கர்ஸிதா;
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா;
ஸபுஷ்பாங்குர கோரகா;
என்பது, ஸ்ரீராமா. அயோத். 59
: 4.
8. ‘உபதப்த உதகாநத்ய; பல்பலாநி
ஸராம்ஹிச
பரிஸூஷ்க பலாஸாதி வநாநி
உபவநாநிச’
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
59 : 5.
|