முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

வற

202

திருவாய்மொழி - ஏழாம் பத்து

வற்றை எல்லாம் தரக் கூடியத்’ என்கிறபடியே அன்றோ? 1கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ? ‘இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே, எங்கேனும் ஓரிடத்தே பிறந்தநாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது. 2‘யத: குதஸ்சித்ஜாதா - யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி. ‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ? 3தேசந்தானே எல்லா நன்மைகளையும் பிறப்பிக்கவற்றாய் இருக்குங்காணும். 4இவ்வூரிலவர்கள் மற்றையோரைப்போலே உண்டு உடுத்துத் தடித்து வார்த்தை சொல்லித் திரிந்து. பெருமாளுக்கு வருவது ஒரு பிரயோஜனத்தோடு மாறுபட்டவாறே, சத்துரு சரீரம் போலே இருக்க, சரீரங்களைப் போகட்டுக்கொடு நிற்பார்கள். சத்துரு சரீரம் போகடவேண்டுவது ஒன்றோ அன்றோ?

    5
‘இராகவனுக்காகச் சூழ்ந்துகொண்டிருக்கிற சேனையானது பிராணனிடத்தில் அருள் வைப்பது இல்லை,’ என்கிறபடியே

_____________________________________________________________________

1. ‘நிலத்தின் தன்மையே ஸ்ரீராம பத்திக்குக் காரணமானால், மந்தரைக்கு அப்பத்தி
  இல்லாமைக்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘கைகேசியின்’ என்று தொடங்கி.

    ‘ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா
கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
     ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’

என்பது, ஸ்ரீராமா. அயோத். 7 : 1. ‘ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.
‘பிரசித்தியில்லாதவளாய்க் கிடப்பவள் ஒருத்தி’ என்றபடி.

2. தாம் அருளிச்செய்ததற்குச் சம்வாதம் காட்டுகிறார், ‘யத; குதஸ்சித் ஜதா-யாதாம்
  ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று. அப்படி வியாக்கினம் செய்த உடாலிக்கும் கருத்து,
  தாம் மேலே அருளிச்செய்ததே என்கிறார், ‘இந்த நிலத்தில்’ என்று தொடங்கி.

3. ஆக, ‘நற்பால்’ என்ற அடைமொழியின் பொருளை முடித்துக் காட்டுகிறார், ‘தேசம்
  தானே’ என்று தொடங்கி.

4. ‘இது கண்டது உண்டோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘இவ்வூரியவர்கள்’ என்று தொடங்கி. ‘இவ்வூரிலவர்கள்’ என்றது, திருவரங்கம்
  பெரிய கோயிலில் வசிக்கின்றவர்களை. தடித்து-பூரித்து. பெருமாளுக்கு-பெரிய
  பெருமாளுக்கு. ‘சத்துரு சரீரம்’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘சத்துரு
  சரீரம்’ என்று தொடங்கி.

5. ‘அவன் பிரயோஜனத்துக்காகத் தங்கள் உயிர்களை உபேஷித்த பேர் உளரோ?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,’ இராகவனுக்காக’ என்று தொடங்கி.

    ‘ராகவார்த்தே பராக்ராந்தா ந ப்ராணே குருதே தயாம்’

என்பது, ஸ்ரீராமா. யுத்.