முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அனுபவம

204

திருவாய்மொழி - ஏழாம் பத்து

அனுபவம் ஒரு காலத்தில் உண்டாகிறது சரீரத்தின் சேர்க்கையால் அன்றோ? 1தர்மியில் ஐக்கியத்தாலே அங்குத்தைக்கு ஒரு குறை இல்லை அன்றோ?

    நற்பாலுக்கு உய்த்தனன் - நல்ல சுபாவத்தையுடைத்தாம்படி செலுத்தினான். என்றது, தன் சேர்க்கையாலே சுகத்தையுடையவர்களாகவும் தன் பிரிவாலே துக்கத்தையுடையவர்களாகவும் செய்கையைத் தெரிவித்தபடி. 2இவற்றினுடைய கர்மங்களின் ஏற்றத் தாழ்வுகளால் வரில் அன்றோ அவற்றிற்குத் தக்க அளவுகளாய் இருப்பன? அவனாலே வந்தன ஆகையாலே எல்லார்க்கும் ஒக்க நன்மை விளைந்தபடி. 3‘என்னால் நியமிக்கப்பட்டவராய் நீர் அந்த உத்தம உலகத்தை அடைவீர்,’ என்கிறபடியே, இங்கு உண்டான பற்று அறுத்து ஒரு தேச விசேடத்து ஏறச்சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக் கொடுக்க வல்லவனுக்கு இங்குத் தன்னை ஒழியச் செல்லாமை விளைக்கை பணியுடைத்து அன்றோ? நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் - 4அரசன் தன்

_____________________________________________________________________

1. ‘சரீரத்தின் சேர்க்கையாலே உண்டாக வேண்டுமோ? அங்குள்ள விஷயம்
  குறைவுபட்டிருப்பதனால் என்று கொண்டாலோ?’ எனின், ‘தர்மியில்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. ‘நன்று; புல் எறும்பு முதலானவற்றிற்கு இந்த நிலை உண்டாகக் கூடுமோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. ‘நன்று; மனித பாவனையில் இருக்கிற இவர் நற்பாலுக்கு உய்க்கக் கூடுமோ?’
  எனின், ‘என்னால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

        ‘அபராவர்த்திநாம் யாச யாச பூமிப்ரதாயிநாம்
        மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகந் அநுந்தமாந்’

என்பது, ஸ்ரீராமா. ஆரண். 68 : 80. இது, ஜடாயுவைப் பார்த்து ஸ்ரீராமபிரன் கூறியது.
‘பணியுடைத்தன்றே’ என்றது, ‘அருமையுடையதன்றே?’ என்றபடி.

4. நான்முகனார் நாடு என்னாமல், ‘பெற்ற நாடு’ என்று விசேடித்ததற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார், ‘அரசன்’ என்று தொடங்கி,  ‘‘மற்றும் கற்பரோ?’ என்ற
  இடத்தில், கோயில் கந்தாடை நாயன், ‘திருவடியும் திருப்பாணாழ்வாரும்
  தொண்டரடிப்பொடியாழ்வாரும் கூடி இருக்கிறதற்குக் கருத்துத் தெரியுமோ?’
  என்று ஸ்ரீபாதத்து முதலிகளைக் கேட்க, ‘அடியோங்களுக்குத் தெரிந்தது இல்லை,’
  என்ன, ஆனால், ‘ந அந்யத்ர கச்சதி’ என்றும், ‘மற்று ஒன்றினைக் காணாவே’
  என்றும், ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்றும் மூவரும் ஏக ப்ரகிருதிகள்
  ஆகையாலே கூட எழுந்தருளியிருக்கிறார்கள் என்று அறியக்கடவீர்,’ என்று
  பிரசாதித்தருளினார்.