முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

னு

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 1

205

னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால் அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக அவனுடைய சுவாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே, சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கையடைப்பான நாட்டுக்குள்ளே, அவன் சுவாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து, தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான். ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

(1)

                  708 

        1நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
         நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
         நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
         நாட்டை அளித்துஉய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.


    பொ-ரை
: ‘இந்த உலகத்திலே பிறந்து மக்கள் படாத துன்பத்தை எல்லாம் தான் பட்டு, மனிதர்களுக்காக, நாட்டினை வருத்துகின்ற அரக்கர்களைத் தேடிச் சென்று கொன்றிட்டு நாட்டைப் பாதுகாத்து அகால மரணம் உண்டாகதபடி வாழச்செய்து தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பிரகாரத்தை ஸ்ரீராமாயண முகத்தாலே கேட்டிருந்தும், இந்த உலகத்திலே பிறந்தவர்கள் ஸ்ரீஇராமபிரானுக்கு ஆள் ஆவரே அன்றி வேறு ஒருவர்க்கு அடிமை ஆவரோ?’ என்கிறார்.

    வி-கு : ‘பிறந்து பட்டு நாடித் தடிந்திட்டு அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டும் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்க.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 2‘மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை நோக்க, முதற்பாசுரத்திற்சொன்ன குணம் குணஹாநி’ என்னும்படி மேலேயுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச்செய்வர்.

_________________________________________________

1. ‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
  கடந்தாளை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
  தொடர்ந்த ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
  நடந்தாளை ஏத்தாத நாவென்ன நாவே!
  நாராய ணாவென்னா நாவென்ன நாவே!’

என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

2. மேலே வருகின்ற திருப்பாசுரங்களிற்சொல்லுகிற குணங்கள் எல்லாம், கீழே
  கூறிய திருப்பாசுரங்களிள்கூறிய குணங்களைக்காட்டிலும் உயர்ந்தவை
  என்னுமிடம் தோன்ற அவதாரிகை அருளிச்செய்கிறார்.