முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 1

207

பிறந்து, அவர் தோள் நிழலிலே வாழ்தல். நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ -‘பெருமாளுக்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.

    பிரமன் முதலான தேவர்களும், 1‘நீவிர் நாராயணரான தேவர் ஆவீர்’ என்றார்களே அன்றோ? 2‘ஒருவன் சோற்றை உண்டவர்கள் அவனை ஒழிய வேறு ஒருவர்க்குக் காரியம் செய்வார்களோ?’ என்னுமாறு போலே. நாரணற்கு - 3வரையாதே எல்லாரோடும் பொருந்துகையும், அடியார்களுக்காகத் தன்னை ஓக்கி வைக்கயும், அவர்களுக்காத் தன் மார்பில் அம்பு ஏற்கையும், அவர்கள் விரோதிகளைப் போக்குவதையும், அடியார்கட்கு வத்சலனாய் இருக்கையும், அவர்கள் தோஷத்தைப் பார்த்துவிட்டுப் போக மாட்டாமையும் ஆகிய இவை எல்லாவற்றாலும் பெருமாளை ‘நாராயணன்’ என்னத்தட்டு இல்லை அன்றோ? ஆள் அன்றி ஆவரோ - மேற்பாசுரத்திலே ‘கற்பரோ?’ என்றது; இங்கே, ‘ஆள் இன்றி அவரோ’ என்கிறது; 4‘கல்வியினுடைய பலம் ஆள் ஆகை’ என்றபடி. பிறந்தவர் ஆள் அன்றி ஆவரோ - 5‘நீ காட்டில் வசிப்பதற்காகவே தோற்றுவிக்கப்

_____________________________________________________________________

1. ‘நன்று; நாராணன்’ என்ற திருப்பெயர் ஸ்ரீராமபிரானைக் காட்டுமோ?’ எனின்,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நீவிர்’ என்று தொடங்கி.

    ‘பவாந் நாராயணோ தேவ; ஸ்ரீமான் சக்ராயுதோ விபு:

என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. இது ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன் கூறியது.
இங்கு, கம்பராமாயணம், யுத்தகாண்டம், மீட்சிப்படலம் 98 முதல் 112 முடியவுள்ள
செய்யுள்களைப் படித்து அறிதல் தகும்.

2. ‘நாட்டிற்பிறந்தால் நாரணற்கு ஆளாக வேண்டுமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஒருவன்’ என்று தொடங்கி.

3. ஸ்ரீராமபிரானை ‘நாரணன்’ என்றதற்குப் பிரமாணம் காட்டினார் மேல்; காரணம்
  அருளிச்செய்கிறார், ‘வரையாதே’ என்று தொடங்கி ‘நாரயணன்’ என்ற
  திருப்பெயரும் மேற்கூறிய குணங்கள் எல்லாம் பொருளாதலை முழுக்ஷூப்படி
  முதலிய இரஹஸ்ய கிரந்தங்களால் உணர்தல் தகும். வரையாதே - தாரதம்மியம்
  பாராமல். ஓக்கி வைக்கை-ஆக்கி வைக்கை.

4. ‘கற்றதனா லாய பயன்என்கொல் வாலறிவன்
  நற்றாள் தொழாஅ ரெனின்?’

என்பது, திருக்குறள்.

5. ‘பிறந்தவர் ஆள் அன்றி ஆவரோ?’ என்றதனால் போந்த பொருள்
  அருளிச்செய்கிறார், ‘நீ காட்டில்’ என்று தொடங்கி. ‘ஸ்ருஷ்ட ஸ்தவம் வநவாஸாய’
  என்பது, ஸ்ரீராமா. அயோத். 40 : 5. இஃது இளையபெருமாளைப் பார்த்துச்
  சுமத்திரா தேவி கூறியது. கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், நகர் நீங்கு
  படலம், 150, 151-ஆம் செய்யுள்களைக் காண்க.