முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அம

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 3

213

அமிருதமே அன்றோ பாதேயம்? 1‘புண்டரீகாக்ஷனே!  உனக்குத் தோற்றோம்’ என்றுகொடு போலேகாணும் போவது. 2‘இராமர் தாமரை மலர் போன்ற கண்களையுடையவர்’ என்னப்படுவதன்றோ?

    3
மேற்பாசுரத்தில், ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய், ‘‘சர்வேஸ்வரன்’ என்று ஒரு தத்துவம் உண்டு’ என்று கேட்டார் வாய்க் கேட்டிருக்கிறவர்களை, தான் வந்து அவதரித்துத் தன்வடிவழகாலும் குணங்களாலும் வசீகரித்துத் தன்னை அல்லது அறியாதபடி செய்தான் என்று சொல்லிற்று; இப்பாசுரத்தில், ‘இது ஓர் ஏற்றமோ? தன்னால் அல்லது செல்லாமையைச் செய்து போகட்டுப் போகையாகிறது படுகொலைக்காரரைப் போன்றதே அன்றோ, அங்ஙன் செய்யாதே தன்னோடே கூடக் கொடுபோய்ப் பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார்.

(2)

                       709

        ‘கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றுங் கேட்ப
        கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும் [ரோ?
        சேட்பாற் பழம்பகை வன்சிசு பாலன் திருவடி
        தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே.

_________________________________________________

1. அதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘புண்டரீகாக்ஷனே’ என்று
  தொடங்கி. ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்பது, ஜிந்தா.

2. ஸ்ரீராமபிரான் புண்டரீகாக்ஷன் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘இராமன்’
  என்று தொடங்கி.

        ‘ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர:
        ரூப தாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே’

என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 8. இது பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.

        ‘அண்ணல்தன் திருமுகம் கமல மாமெனின்
         கண்ணினுக் கவமைவேறு யாது காட்டுகேன்!
         தண்மதி யாமென வுரைக்கத் தக்கதோ!
         வெண்மதி பொலிந்தது மெலிந்து தேயுமால்.’

என்பது கம்பராமாயணம்.

3. இத்திருப்பாசுரத்துக்கு முன்னுரையில் கூறிய தாத்பரியம் ஒழிய, வேறும் ஒரு
  கருத்து அருளிச்செய்கிறார், ‘மேற்பாசுரத்தில்’ என்று தொடங்கி.

4. ‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
  தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
  சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
  சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே!
  திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே!’

என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.