முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உண

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 3

215

உண்டே அன்றோ? 1கற்றுத் தெளியக் கண்ட பொருளைக் கேட்டு நம்பியிருத்தல். 2கல்வியும் அதன் பலத்தின் உருவமான கைங்கரியமும் சேரப் பெற்றிலன் ஆகிலும், ஆசாரியன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்ட மாத்திரமாய் இருந்தாலும் தனக்கு ஓர் ஆபத்திலே உதவுகைக்கு ஒரு குறை இல்லை. 3இனி, தன்னிழவு, பிறர்க்குச் சொல்லச் சத்தி இல்லாமையும், தன் நெஞ்சு தெளியாமையால் வருவதுவுமே அன்றோ உள்ளது? கேட்பார்கள் - 4செவியில் தொளையுடையவர்கள். பகவத் குணங்களைக் கேட்கை அன்றோ செவிக்குப் பிரயோஜனம்? ‘கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே’ என்னா நின்றதே அன்றோ? 5எறும்பு வளையைப் போன்றதே அன்றோ?

__________________________________________________________________ 

1. மேலே கூறியதனை விவரணம் செய்கிறார், ‘கற்று’ என்று தொடங்கி.

2. ‘நடுவிருந்த நான்கு நாள்களும்’ என்று தொடங்கி மேலே அருளிச்செய்த
  வாக்கியத்தை விவரணம் செய்கிறார், ‘கல்வியும்’ என்று தொடங்கி. அதன் பலத்தின்
  உருவமான கைங்கரியமாவது, பிறரையும் தங்களைப் போன்று பயிற்சிக்கு
  அதிகாரிகளாக்கி இறைவன் திருவடிகளிலே சேர்த்து, அவனுக்கு முகமலர்ச்சியை
  உண்டாக்குதல்.

3. கேட்டவனுக்கு, இப்படிப் பலம் உண்டானதைப் போன்று இங்கு இருக்கிற நான்கு
  நாள்களும் இரண்டு துக்கமும் உண்டு என்கிறார் ‘இனி’ என்று தொடங்கி.

4. ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுங் கேட்பரோ?’ என்கையாலே, செவிக்குப் பயன்
  இது என்கிறார், ‘செவியில் தொளை’ என்று தொடங்கி.

      ‘செவியப்பயன்’ என்றதன் மறுதலையால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார்
  ‘கேளாச் செவிகள்’ என்று தொடங்கி.

        ‘நீள்வான் குறளுருவாய்  நின்றிரந்து மாவலிமண்
        தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானைத்
        தோளா மணியைத் தொண்டர்க் கினியானைத்
        கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.’

என்பது, பெரிய திருமொழி.

       
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
         தோட்கப் படாத செவி.’

என்பது, திருக்குறள்.

5. ‘செவி அல்ல என்பது என்? தொளை இருக்கின்றதோ?’ என்ன,  அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘எறும்பு வளையை’ என்று தொடங்கி.

        ‘தவப்பொழி மாரி காப்பத் தடவரைக் கவிகை அன்று
        கவித்தவன் கோயில் செல்லாக் கால்மரத் தியன்ற காலே;
        உவப்பினின் அமுத மூறி ஒழுகுமால் சரிதங் கேளாச்
        செவித்தொளை நச்சு நாகம் செறிவதோர் தொளைமற் றாமல்.’

என்பது, பாகவதம், சௌனகாதியர் அன்பினாலை உரைத்த அத்தியாயம்.