New Page 1
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா.
3 |
217 |
‘இராமபிரானை அல்லால்
மற்றும் கற்பரோ?’ என்றார் மேல்; இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’
என்னாநின்றார்; ‘இதுதனக்கு அடி என்? என்னில், 1அந்த அவதாரத்தினை நினைத்தபோது
2‘தயரதற்கு மகன்தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ என்பர்; இந்த அவதாரத்தை நினைத்தபோது
‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ என்பர்; இப்படி இழிந்த துறைகள்தோறும் அழுந்த
வல்லார் ஒருவர் அன்றோ? 3ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில்
கால் வாங்கமாட்டாதவாறு போலே ஆயிற்று, ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில்
போகமாட்டாமையும்.
கேட்பார் செவி
சுடு கீழ்மை வசவுகளை வையும் - 4இங்குக் ‘கேட்பார்’ என்றார், மேலே
‘கேட்பார்’ என்றது போன்று அன்று; கீழ்மை வசவுகளையே கேட்பாரைக் குறித்தது இங்கு. பகவானுடைய
நிந்தைக்கு ஜீவனம் வைத்துக் கேட்கும் தண்ணியவர்களுங்கூடப் பொறுக்கமாட்டாமை செவி புதைத்து,
‘இத்தனை அதிரச் சொன்னாய், இப்படிச் சொல்லப் பெறாய் காண்’ என்று சொல்லும்படியான வசவு
__________________________________________________________________
1. ஒவ்வோர் அவதாரத்திலும்
இவர்க்கு உண்டான பிராவண்யத்தின் மிகுதியைச்
சொல்லுகிறது ஆகையாலே, விரோதம் இல்லை என்றுகொண்டு
விடை
அருளிச்செய்கிறார், ‘அந்த அவதாரத்தினை’ என்று தொடங்கி. தெய்வப் புலமைத்
திருவுள்ளுவனார்
தாம் ஒவ்வோர் அறத்தையும் பற்றிக் கூறுமிடத்து
‘அவ்வறத்தினூங்கு உயரந்தது பிறிது ஒன்று இல்லை’
என்று கூறிச்செல்லுதலும்
ஈங்கு நினைவு கூர்தல் தகும். மஹாமதிகளுக்கு இங்ஙனம் கூறுதல் இயல்பு.
2. ‘தயரதற்கு’ என்பது.
திருவாய். 3. 6 : 8. ‘நம் கண்ணன்’ என்பது,
திருவாய். 2. 2 : 1.
3. ஒவ்வோர் அவதாரத்திலும்
இவர்க்கு உண்டான பிராவண்யத்தின் மிகுதியைத்
திருஷ்டாந்த முகத்தால் காட்டுகிறார்,
‘ஒவ்வொரு குணத்தை’ என்று தொடங்கி.
4. ‘பகவத்
குணங்களைக் கேட்பார் செவி சுடு’ என்றால் இவனுடைய வசவுகளின்
கொடுமை சித்தயாது என்று திருவுள்ளம்
பற்றிக் ‘கேட்பார்’ என்றதற்கு வேறு
பொருள் அருளிச்செய்கிறார், ‘இங்கு’ என்று தொடங்கி.
வில்லி பாரதம், இராயசூயச்
சுருக்கம், 114 முதல் 127 முடியவுள்ள செய்யுள்களைப் படித்தறிதல் தகும்
இங்கு.
|