முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அன

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 3

221

அன்றோ? 1இவன்பக்கலிலே பரமபத்தி அளவாக உண்டானாலும், ‘அதற்கும் கரணங்கிளன் சேர்க்கையைக் கொடுத்தான் ஈஸ்வரன் அன்றோ?’ என்று அதுவும் கழியாநிற்க, வருந்தி இல்லாதது ஒன்று உண்டாக்குகை பணி அன்று. 2ஆளவந்தார், ‘சிசுபாலன் பெற்றிலன் காண்’ என்று அருளிச்செய்வர்; ‘அது என்?’ என்னில், ‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே; 3நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனைகாண்’ என்று அருளிச்செய்வர். 4‘காகம, திருமுன்பே எய்த்து விழுகையாலும், இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும், அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது? 5‘காகாசுரனிடத்திலும் சிசுபாலனிடத்திலும் சிறிது குணமாயினும் இருந்ததனால் குறைவுபட்டதான் தேவரீருடைய பொறுமை’ என்கையாலே. 6‘பலபல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை, அலைவலைமை தவிர்த்த அழகன்’ என்றார் அன்றோ பெரியாழ்வாரும்? ‘வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்’ என்றார் திருமழிசையாழ்வார்.

___________________________________________________________________

1. ‘துவங்கரிக்கை முதலானவைதாம் ஒத்த சாதனமானாலோ?’ எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இவன் பக்கல்’ என்று தொடங்கி.

2. ‘நன்று; சிசுபாலனைப் போன்று நாமும் வைது மோக்ஷம் பெறலாமோ?’ எனின்,
  ‘அது மோக்ஷம் அன்று’ என்கைக்கு ஓர் ஐகிஹ்யம் காட்டுகிறார், ‘ஆளவந்தார்’
  என்று தொடங்கி. ‘சாதனம் இவன் கையில் இல்லாமையாலே’ என்றது,
  ‘பிரார்த்தித்தல் இல்லாமையாலே’ என்றபடி.

3. ‘எங்ஙனமாயினும் அவன் பெற்றானே?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘நாட்டை’ என்று தொடங்கி. கொற்றவன் - சுவாமி.

4. ‘இதற்கு இனி ஒரு காரணத்தைத் தேடிச் சொல்லுகையாவது அவன் கிருபைக்கு
  ஒரு கொத்தை சொல்லுகை’ என்று மேலே அருளிச்செய்ததற்குப் பிரமாணம்
  காட்டுவதற்குத் திருவுள்ளம் பற்றி, அந்த அர்த்தத்தை அருளிச்செய்கிறார், ‘காகம்’
  என்று தொடங்கி.

5. பிரமாணத்தை அருளிச்செய்கிறார், ‘காகாசுரனிடத்திலும்’ என்று தொடங்கி.

    ‘பலிபுஜி சிசுபாலே தாத்ருக் ஆகஸ்கரே வா
    குணலவ ஸஹவாஸாத் த்வத்க்ஷமோ ஸங்குசந்தீ’

என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம், 3 : 97.

6. ‘சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான் என்று
  ஆழ்வார்கள் அருளிச்செய்வர்’ என்றார் மேல்; அருளிச்செய்தது எங்கே?’ என்ன,
  காட்டுகிறார், ‘பலபல’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார் திருமொழி,
  4. 3 : 5.
 ‘வைது நின்னை’ என்பது, திருச்சந்த விருத்தம், 111.