முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

222

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    ‘இப்பாசுரத்தில் ஏற்றமாகிறது, ‘தன்னால் அல்லது செல்லாமை விளைந்தாரைக் கூடக் கொடு போனான்’ என்றது ஓர் ஏற்றமோ, தன்பக்கல் அபராதம் செய்த சிசுபாலனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்ததற்கு?’ என்பதாம்.

(3)

                       710

        தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
        பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து
        நன்மைப் புனல்பண்ணி நான்முக னைப்பண்ணித் தன்னுள்ளே
        தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.

    பொ - ரை : ‘பல விதமாகப் படர்ந்திருக்கும் பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி அழிவு அடைந்த காலத்து, நன்மையையுடைய தண்ணீரை உண்டாக்கிப் பின்னர்ப் பிரமனை உண்டாக்கி. முன் வாசனை அழியும்படி தன்னுள்ளே கலந்திருந்த எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து, உலக காரணனாய் இருக்கும் தன்மையை அறிகின்றவர்கள் தாம் காரணப்பொருளான கண்ணபிரானுக்கு ஆள் ஆவரே அன்றி மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.

    வி - கு :
மயக்கிய - கலந்து கிடந்த பொருள்கள். சூழல் - விரகு. ‘சிந்தித்து அறிபவர் அவற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்க. அவற்கு-அவனுக்கு; அகாரவாச்சியனான கண்ணபிரானுக்கு.

    ஈடு : நான்காம் பாட்டு. 1‘சிசுபாலனுக்குத் தன்னைக் கொடுத்தது ஓர் ஏற்றமோ, பிரளயத்திலே மங்கிக் கிடந்த உலகத்தை உண்டாக்கின இந்த மஹாகுணத்துக்கு?’ என்கிறார். சிசுபாலனைக் காட்டிலும் குறைந்தார் இலர் அன்றோ சம்சாரிகளில்?

_____________________________________________________________

    வைதா ரையும்முன் மலைந்தா ரையும்மலர்த் தாளில்வைத்தாய்
    மொய்தாரை யத்தனைத் தீங்கிழைத் தேனையும் மூதுலகில்
    பெய்தாரை வானிற் புரப்பான் இடபப் பெருங்கிரியாய்!
    கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த்தொண்டு கொண்டருளே.’

என்பது, அழகரந்தாதி.

1. பின் மூன்று அடிகளைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘உலகத்தைப்
படைத்தது மஹா குணமானபடி யாங்ஙனம்? அவனைப்
  போன்று அனைவரும் வைதுகொண்டிருந்தார்களோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘சிசுபாலனை’ என்று தொடங்கி.