முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

224

திருவாய்மொழி - ஏழாம் பத்து

செய்கைக்கு அன்றோ? பன்மை படர்பொருள் ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து-தேவர்கள் முதலான வேற்றுமையாலே பல வகைப் பட்டுக் கர்மங்களுக்குத் தகுதியாக விரிந்த பொருள்களுள் ஒன்றும் இல்லாத காலத்து. என்றது, ‘தேவர் மனிதர் திரியக்குகள் முதலான உருவங்களான உண்டாக்கக்கூடிய பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி பாழ் கூவிக் கிடக்கிற நெடுங்காலத்து’ என்றபடி. 1ஈஸ்வரன் உலகத்தை அழித்து நெடுங்காலம் பாழ் கூவிக் கிடக்கும்படி இட்டு வைப்பான். பயிர் செய்கிறவன் விளைநிலம் உவர் கழியும்படி நீரைத் தேக்கி வைக்குமாறு போலே, இவற்றினுடைய துர்வாசனை போகைக்காகப் படைத்ததைப் போன்ற காலம் அழித்திட்டு வைப்பன். 2கண்ணுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி சத்து என்ற நிலையுடன் கூடிய காலத்து.

    நன்மைப் புனல் பண்ணி - 3அழிப்பதற்குப் பரப்பின நீர் போல அன்று. ‘தண்ணீரையே முதலில் படைத்தான்’ என்கிறபடியே, முதன்முன்னம் தண்ணீரைப் படைத்து. நான்முகனைப் பண்ணி - 4இவ்வளவும் வர அசித்தைக்கொண்டு காரியம் கொண்டு, ‘இவை இரண்டும் நம் புத்தி அதீனமான பின்பு இனிச் சித்தையும் கொண்டு காரியம் கொள்ளுவோம்’ என்று பார்த்துப் பிரமனையும் படைத்து. 5‘எவனுக்கு ஆத்துமாக்கள் எல்லாம் சரீரமோ,’ ‘எவனுக்கு மண் முதலியவை சரீரமோ’ என்கிறபடியே, இரண்டும் இவனுக்கு உறுப்

______________________________________________________________________

1. ‘நெடுங்காலம் பாழாகவிட்டு வைப்பது எதற்காக?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஈஸ்வரன்’ என்று தொடங்கி.

2. ‘ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘கண்ணுக்கு’ என்று தொடங்கி. என்றது, ‘கண்ணாலே காண்கைக்கு ஒன்றும்
  இல்லாதபடி’ என்றவாறு.

3. ‘நன்மை’ என்ற சொல்லுக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘அழிப்பதற்கு’ என்று
  தொடங்கி. முதலில் தண்ணீரைப் படைத்ததற்குப் பிரமாணத்தை அருளிச்செய்கிறார்,
  ‘தண்ணீரையே’ என்று தொடங்கி.

    ‘அப ஏவ ஸஸர்ஜாதௌ’ என்பது, மநுஸ்மிருதி, 1 : 8.

4. இவ்வளவும் வர’ என்றது, ‘அண்ட சிருஷ்டி பர்யந்தம்’ என்றபடி. இவை இரண்டும்
  - சித்தும் அசித்தும்.

5. ‘இவை இரண்டும் அவன் ‘புத்தியதீனம்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
  ‘எவனுக்கு’ என்று தொடங்கி. ‘யஸ்ய ஆத்மா ஸரீரம்’ ‘யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்’
  என்பன, பிருஹதாரண்ய உபநிஷத்.