முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 3

225

பாய்ப் பரதந்திரமாய் அன்றோ இருப்பன? 1‘எவன் பிரமனை முன்பு படைத்தானோ’ என்பது சுருதி. 2ஒரு குழமணனைப் பண்ணி என்பாரைப் போலே ‘நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறார். தன்னுள்ளே - தன்னுடைய சங்கற்பத்தின் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே. தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்து -பழையதாக, ‘ஸதேவ - சத் ஒன்றே’ என்கிறபடியே, ‘தான்’ என்கிற சொல்லுக்குள்ளேயாம்படி பண்ணியிட்டு வைத்து, பின்னர், ‘பஹூஸ்யாம் - பல பொருளாக ஆகக்கடவேன்’ என்கிறபடியே, இவற்றைத் தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து, உண்மை நிலையை அறியுமவர்கள் அவனை ஒழிய வேறே சிலர்க்கு ஆள் ஆவரோ?

    3
‘விரோதியான சிசுபாலனுக்குத் தன் திருவடிகளைக்கொடுத்தான்’ என்றது, ‘இது ஓர் ஏற்றமோ விரோதிகளை உண்டாக்கித் தன்னை வைவித்துக்கொண்ட நீர்மைக்கு?’ என்கிறார்.

    ‘பன்மைப் படர் பொருள், தன்னுள்ளே தொன்மை மயக்கிய, ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி, தோற்றிய சூழல்கள் சிந்தித்து, தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்று கூட்டுக.

(4)

                   711

        சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல்அன்றிச் சூழ்வரோ?
        ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
        தாழப் படாமல் தன்பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட
        கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.

   
பொ-ரை : ‘பிரளய வெள்ளத்திலே ஆழ அழுந்திய பூமியைக் காலம் நீட்டிக்காமல், தன் திருமேனியில் ஒரு கொம்பிலே தானே கொண்ட வராகத்தின் அழகிய வடிவான இதனைக் கேட்டும்

__________________________________________________

1. சேதந சிருநாட்டில் முதலில் பிரமனைப் படைத்ததற்குப் பிரமாணம்
  காட்டுகிறார், ‘எவன்’ என்று தொடங்கி.

    ‘யோ ப்ரஹ்மாணப் விததாதி பூர்வம்’ என்பது, ஸ்வேதாஸ்வ. உப

2. படைத்தான் என்னாமல், ‘பண்ணி’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
  ‘ஒரு குழுமணனை’ என்று தொடங்கி. குழமணன் - மரப்பாவை.

3. மேல் திருப்பாசுரத்தைக்காட்டிலும் இத்திருப்பாசுரத்தின் ஏற்றத்தை
  அருளிச்செய்கிறார், ‘விரோதியான’ என்று தொடங்கி.