முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 5

227

பின்பு இனிச் சத்தையுங்கூட அழிந்து போக ஒண்ணாது என்று பார்த்து’ என்றபடி. தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட - பெரிய பூமியைத் தன் எயற்றிலே 1நீலமணி போலே கொண்ட; 2தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட. 3உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே, பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை; 4வேறு முகத்தாலே காத்தல் அன்றியே, தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி கரைந்து போன பூமி வேண்டிக்கொள்ளச் செய்தது அன்று ஆதலின், ‘தான் கொண்ட’ என்கிறார்.

    கேழல் திரு உரு ஆயிற்று - 5அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி. அடியார்களைப் பாதுகாக்க வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அதுதானே நிறம் பெறும்படியாய்க் காணும் இருப்பது; 6‘மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்னும்படியே. ‘மாசு உடம்பில் நீர் வாரா - எங்கேனும் உண்டான அழுக்கும் வந்து சேரும்படி இருப்பது ஒரு வடிவைக்கொண்டு. மானம் இலாப் பன்றியாம்-ஈஸ்வரனாந்தன்மை பின்னாட்டாதபடி இருக்கை. தன் இனங்கள் மோந்து பார்த்துத் ‘தன்னினம்’ என்று

____________________________________________________________________

1. சுவேத வராஹம் ஆகையாலே, பூமியை ‘நீலமணி’ என்கிறார்.

2. ‘இடை’ என்ற சொல்லுக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘தன் திரு எயிற்றிலே’
  என்று தொடங்கி.

3. ‘ஒரு கூற்றிலே கொண்டால் மற்றை இடம் எதற்காக?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘உதாரராய்’ என்று தொடங்கி.

4. ரசோக்தியாக அருளிச்செய்கிறார், ‘வேறு முகத்தாலே’ என்று தொடங்கி.

5. ‘திரு’ என்றதற்குத் ‘திருமேனியின் அழகு’ என்று பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘அழிவுக்கு’ என்று தொடங்கி. அழிவுக்கு இட்ட வடிவு - தன் மேன்மையை விட்டு
  நீர்மையைக் கொள்ளுகையான வராஹ வேடத்துக்கு. ‘ஆத்தும குணத்தால் வந்த
  அழகு’ என்று பொருள் அருளிச்செய்கிறார், ‘அடியார்களை’ என்று தொடங்கி.

6. ‘வராஹ நாயனார் அழகியார்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘மானமிலாப்
  பன்றியாம் தேசு’ என்று. இது, நாச்சியார் திருமொழி, 11 : 8. பாசுரத்திற்குப்
  பொருள் அருளிச்செய்கிறார், ‘எங்கேனும்’ என்று தொடங்கி. ‘மானமிலா’ என்பதற்குப்
  பொருள், ‘ஈஸ்வரனாந்தன்மை’ என்று தொடங்கும் வாக்கியம். ‘ஆம்’ என்பதற்குப்
  பொருள், ‘தன் இனங்கள்’ என்று தொடங்கும் வாக்கியம்.