நம
228 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
நம்பும்படி அகவாயில்
புரை அற்று இருக்கை. 1மாரீசனாகிய மாயமானை மோந்து பார்த்து ‘இராக்கத வாசனை உண்டு’
என்று போயின அன்றோ மற்றைய மான்கள்? பன்றியாம் தேசுடை தேவர் - இவ்வடிவு கொண்டிலனாகில்
அருமந்த ஒளியை எல்லாம் இழக்குமத்தனையன்றோ. நித்தியசூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து அங்கே
இருப்பதைக்காட்டிலும் தாழ விட்டதால் வந்த ஏற்றம்?’ கேட்டும் உணர்ந்துமே-கேட்டும் மனனம் செய்தும்,
அதனாலே தம் முயற்சியை விட்டவர்கள் சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
தான் உலகத்திற்குக்
காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான்
என்னுமது ஓர் ஏற்றமோ, பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக்கொண்டு எடுத்த
இந்த உபகாரத்துக்கு?
(5)
712
கேட்டும் உணரந்தவர்
கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமி லாவண்கை
மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள்
சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமன
னாய்ச்செய்த கூத்துகள் கண்டுமே.
பொ-ரை :
‘கொடுப்பதில் குறைவு இல்லாத கையையுடையமாவலி வருத்த வருந்தி, கூட்டம் கூட்டமாகச் சென்று இரந்தவர்களாகிய
தேவர்களுக்குத் துன்பத்தை நீக்கும்பொருட்டுக் கோட்டம் பொருந்திய கையையுடைய ஸ்ரீ வாமனனாகிச்
செய்த செயல்களைக் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்கள், கேசவனுக்கு ஆள் ஆவரே அன்றி வேறு
ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.
வி-கு :
‘வண் (மையில்) வாட்டம் இல்லாத கை’ என்க. ‘கோட்டம் கை’ என்றது, வாங்கும்போது கை
வளைந்திருத்தலைக் குறித்தபடி. நீக்கிய ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நீக்கும்
பொருட்டு வாமனன் ஆனான்.
______________________________________________________________
1. ‘வராஹமானால்
தன்னினம் என்று மற்றைப் பன்றிகள் நம்பமாட்டாவோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘மாரீசனாகிய’ என்று தொடங்கி.
‘தேசு’ என்றதற்கு பாவம், ‘இவ்வடிவு’ என்று தொடங்கும் வாக்கியம்.
‘தேவர்’ என்பதற்கு பாவம், ‘நித்தியசூரிகளுக்கு’ என்று தொடங்கும்
வாக்கியம்.
|